"வெறித்தனமான சினிமா ரசிகரா இருப்பாரோ"... 17 வருசமா தியேட்டரில் பார்த்த 470 படங்கள்.. வைரலாகும் குறிப்புகள்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாம் சமூக வலைத்தளத்தை திறந்தாலே நம்மை சுற்றி நடக்கும் எக்கச்சக்கமான விஷயங்கள் அதில் கொட்டி கிடக்க தான் செய்கிறது. இதில் பல விஷயங்களை நாம் இயல்பாக கடந்து சென்றாலும் சில விஷயங்கள், நம்மிடையே ஒருவித வியப்பை ஏற்படுத்தி பலரது மத்தியில் பேசு பொருளாக மாறும்.
Images are subject to © copyright to their respective owners.
அந்த வகையில் ஒரு சம்பவம் குறித்த ட்விட்டர் பதிவு தான் தற்போது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. நம்மில் பலரும் சினிமா மீது தீவிர ரசிகர்களாக நிச்சயம் இருப்போம். அதிலும் வீட்டில் இருந்து பார்ப்பதை விட திரை அரங்கிற்கு சென்று திரைப்படங்கள் பார்ப்பதை பெரிதும் விரும்பும் ஆட்களாக கூட இருப்போம். ஆனால், நாம் பார்க்கும் படங்கள் எண்ணிக்கையை குறிப்பிடாமல் அதனை கடந்து சென்று கொண்டே இருப்போம்.
அப்படி இருக்கையில் கடந்த பல வருடங்களுக்கு முன்பாக நபர் ஒருவர் தான் திரையரங்குகளில் பார்த்த படங்களின் பெயர், கொட்டகை, மொழி, நேரம், கட்டணம் உள்ளிட்ட விவரங்களை ஒரு நோட்டு புத்தகத்தில் தன் கைப்பட எழுதி வைத்துள்ளது தொடர்பான புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
இதனை அந்த நபரின் பேரன் தான் தற்போது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அக்ஷய் என அறியப்படும் அந்த ட்விட்டர் பயனாளி, தனது தாத்தா திரையரங்கில் பார்த்த திரைப்படங்களின் பெயர்கள் உள்ளிட்ட நோட்டு புத்தகத்தின் புகைப்படங்களை பகிர்ந்து, "நீண்ட நாட்களுக்கு முன்பு எனது தாத்தா அவர் பார்த்த திரைப்படங்களை பதிவு செய்ய ஒரு நோட்டுப் புத்தகத்தை வைத்திருந்துள்ளார். இது அவர் உருவாக்கிய சொந்த Letterboxd என்றே சொல்லலாம். இதில் ஹிட்ச்காக் மற்றும் ஜேம்ஸ் பாண்ட் ஆகியோரின் படங்களை அவர் திரையரங்கில் பார்த்தது வியப்பாக உள்ளது.
அதே போல, அன்பே வா படத்தையும் (1966), கம் செப்டம்பர் (1961) என்ற ஆங்கில படத்தையும் அவர் திரை அரங்கில் பார்த்துள்ளார். கம் செப்டம்பர் படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் அன்பே வா. இரண்டையுமே அவர் திரையரங்கில் பார்த்துள்ளார்" என்றும் வியப்புடன் அந்த இளைஞர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
1958 முதல் 1974 வரையில் வெளியான மொத்தம் 470 திரைப்படங்கள் குறித்த விவரங்கள் இதில் குறிப்பிடப்பட்டதாக தெரியும் சூழலில் பலரும் இதனை மிக வியப்புடன் பார்த்து வருகின்றனர். அந்த காலத்திலேயே இப்படி ஒரு தீவிர சினிமா ரசிகர் என்பதுடன் மட்டுமல்லாமல் ஆங்கிலம், தமிழ் என பல மொழிகளில் திரைப்படங்களையும் திரையரங்கில் அவர் சென்று பார்த்ததும் தற்போது உள்ள சினிமா விரும்பிகளை ஒரு நிமிடம் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
Also Read | கல்யாணம் முடிஞ்சு வரும்போது கண்கலங்கிய மனைவி.. முதல்வர் முக ஸ்டாலின் சொன்ன ஒரே வார்த்தை!!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “வெளி உணவுகளை எடுத்துவர திரையரங்குகள் தடை விதிக்கலாம்.. ஆனால்..” - உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!
- தாத்தாவோட சுயசரிதையில் இருந்த பக்கங்கள்.. தமிழ்நாட்டை தேடிவந்த பிரிட்டன் நபர்.. மனதை நெகிழ வைத்த பின்னணி!!
- Annamalai: "அங்க கைகட்டி நின்னு கும்பிட்டாதான் படம் ரிலீஸ்... அந்த நடிகரின் படம் மட்டும்தான் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக போகுது" .. அண்ணாமலை பேச்சு..
- “வருது.. வருது”.. ‘ஓடிடியில்’ இதுவரைக்கும் இல்லாம இருந்த அந்த விஷயம்.. ‘இப்போ வருது!’ - மத்திய அமைச்சர் அதிரடி!
- தியேட்டர்களில் 100% அனுமதி ‘ரத்து’.. அதற்கு பதிலாக ‘இதை’ பண்ணிக்கொள்ளலாம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..!
- திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு எதிரான வழக்கு... சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!.. தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!!
- இணையம் மூலம்... சட்ட விரோதமாக பார்ப்பவர்களுக்கு செம்ம செக்!.. மாஸ்டர் திரைப்படம் விவகாரத்தில்... சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
- ‘பொதுச்சுகாதார விதிகளில் சமரசம் கிடையாது’!.. தியேட்டரில் 100% அனுமதி விவகாரம்.. அமைச்சர் ‘விஜயபாஸ்கர்’ முக்கிய தகவல்..!
- ‘100% அனுமதி திரும்ப பெறப்பட்டால் அவர் படம் மட்டும்தான் வெளியிடப்படும்’?.. திருப்பூர் சுப்பிரமணியம் பரபரப்பு தகவல்..!?
- வெடிக்கும் ‘தியேட்டர்’ விவகாரம்.. எதன் அடிப்படையில் 100% அனுமதி வழங்கப்பட்டது..? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்..!