‘ஒரு வயதே ஆன குழந்தைக்கு’.. ‘பாலில் குருணை கலந்துகொடுத்து’.. ‘பாட்டி செய்த அதிரவைக்கும் காரியம்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்கிருஷ்ணகிரியில் ஒரு வயதே ஆன குழந்தைக்கு பாலில் குருணை கலந்துகொடுத்து குழந்தையின் பாட்டியே கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் நாகர்குட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜா - சத்யா தம்பதி. இவர்களுக்கு ஸ்ரீமதி என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த வருடம் இரண்டாவதாக மற்றொரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இரண்டாவதும் பெண் குழந்தையாகப் பிறந்ததால் அவர்கள் வருத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தடுப்பூசி போடுவதற்காக நாகர்குட்டை கிராமத்திற்கு வந்த செவிலியர் ஒருவர் குழந்தை அங்கு இல்லாததால் தாய் சத்யாவிடம் குழந்தையைப் பற்றிக் கேட்டுள்ளார். அதற்கு அவர் குழந்தையை தனது சகோதரியிடம் கொடுத்துள்ளதாகக் கூறியுள்ளார். அவர் பேச்சில் சந்தேகமடைந்த செவிலியர் இதுகுறித்து மருத்துவர் ஹரிராம் என்பவரிடம் கூற அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் குழந்தையின் பாட்டி பொட்டியம்மாள் என்பவர் பாலில் குருணை கலந்துகொடுத்து குழந்தையைக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து ஆய்வு செய்தபோது இந்த அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பொட்டியம்மாளைக் கைது செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பிரசவத்தின்போது நடிகைக்கு நேர்ந்த பயங்கரம்’.. ‘சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காத அவலம்’..
- ‘குட்டையில் சடலமாக மிதந்த இளம்பெண்’.. ‘அருகே சிதறிக் கிடந்த துணி, சாக்லேட்’.. ‘தகாத உறவால் நடந்த விபரீதம்’..
- ‘மருத்துவர்கள் அலட்சியம்’.. காதுல பிரச்சனைனு போன குழந்தைக்கு தொண்டையில் ஆப்ரேஷன்..! சென்னையில் பரபரப்பு..!
- 'அந்த கொலைய பாத்ததானல தீபாவளிக்கு என்ன கொல்ல ஸ்கெட்ச் போட்ருக்காங்க'.. 'எனக்கு 2 கொழந்தைங்க'.. கதறும் ஓவியர்!
- 'வீடு திரும்பாத ஆட்டோ ஓட்டுநர்'... 'கணவன், மனைவியால்’... ‘நடந்த அதிர்ச்சி சம்பவம்'!
- ‘பிறந்ததும் பால் கொடுத்துவிட்டு, துணியால் இறுக்கி’.. ‘பையில் இறந்த குழந்தையுடன் சுற்றிய’.. ‘இளம்பெண்ணின் அதிரவைக்கும் வாக்குமூலம்’
- ‘நடத்துநர் தவறாகப் பேசியதால்’.. ‘கியரைப் பிடித்து பேருந்தை நிறுத்திய இளம் பெண்’.. ‘சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்’..
- '2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை'.. அலறித்துடித்த பெற்றோர்!.. 'பதற வைக்கும்' வீடியோ!
- ‘கை, கால்கள் கட்டிய நிலையில் சடலம்’ ‘துப்பு கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர்’.. அதிர வைத்த பெட்ரோல் பங்க் ஓனர் கொலை..!
- ‘திடீரென இறந்த கணவரால் நிகழ்ந்த சோகம்’... ‘குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்தப் பெண்’... 'செய்த காரியத்தால்'... 'உறைந்துபோன குடும்பம்'!