"நீங்க சிரிப்பீங்கன்னு தெரியும்.. ஆனா".. குடும்பத்தினரிடம் ஜாலியாக பேசிய GP முத்து.. கடைசில சொன்னதுதான் செம்ம..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிக்பாஸ் வீட்டுக்குள் இன்று தனது நடன அசைவுகள் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் GP முத்து. பின்னர், இதுபற்றி தனது குடும்பத்தினரிடம் ஜாலியாக அவர் பேசியுள்ளார்.

Advertising
>
Advertising

கடந்த வாரம் கோலாகலமாக துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 பல்வேறு போட்டிகள், வேடிக்கையான விவாதங்கள் என விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதனை மக்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் பார்த்து ரசித்து வருகின்றனர்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டனுக்கான டாஸ்க்கில் சாந்தி, ஜி.பி. முத்து மற்றும் ஜனனி ஆகியோர் களமிறங்கினர். இறுதியில் ஜி.பி. முத்து வெற்றி பெற்று கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் GP முத்து நடனமாடி அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறார். அவருடைய டான்ஸ் மூவ்மெண்ட்களுக்கு சோசியல் மீடியாவில் அவரது ரசிகர்கள் ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து முத்து, பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ள கேமராவில் தனது வீட்டு குழந்தைகளுடன் பேசுகிறார். அப்போது,"நீங்க என்னை பார்த்து சிரிப்பீங்கன்னு தெரியும். ஆனா ஐ டோன்ட் கேர் (I Dont Care)" என ஜாலியாக கூறுகிறார். சமீப நாட்களில் GP முத்து I Dont Care-ஐ தனக்கே உரித்தான தொனியில் கூறிவருகிறார். அவருடைய இந்த உச்சரிப்பு பலரையும் கவர்ந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

 

GP MUTHU, BIGGBOSS, BIGGBOSS6TAMIL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்