'என் செல்லங்களா நல்லா சாப்பிடுங்க".. குழந்தைகளுக்கு ஆசை ஆசையாய் உணவு பரிமாறிய GP முத்து.. வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தனது குடும்பத்தினருடன் உணவகத்திற்கு சென்ற GP முத்து, அங்கே குழந்தைகளுக்கு தன் கையால் உணவு பரிமாறும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

'என் செல்லங்களா நல்லா சாப்பிடுங்க".. குழந்தைகளுக்கு ஆசை ஆசையாய் உணவு பரிமாறிய GP முத்து.. வைரலாகும் வீடியோ..!
Advertising
>
Advertising

Also Read | எலான் மஸ்கின் தளபதி .. மஸ்க்கின் முக்கிய முடிவுகளுக்கு பின்னால் இருக்கும் தமிழர்.. யாருப்பா இவரு?

டிக்டாக் மூலமாக மக்களிடையே பிரபலம் அடைந்தவர் GP முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த இவர் தனது வெகுளித்தனமான பேச்சின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார் என்றே சொல்ல வேண்டும். யூடியூப் பக்கத்திலும் வீடியோ போட்டுவரும் முத்து, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன்  6-ல் பங்கேற்றார்.

GP Muthu serves food to his family members video goes viral

GP முத்துவின் வெள்ளேந்தியான பேச்சும், அவரது குறும்பு மிக்க நடவடிக்கைகளும் பிக்பாஸ் வீட்டை மேலும் சுவாரஸ்யமாக்கியது என்றே சொல்லவேண்டும். பிக்பாஸ் வீட்டில் அவர் செய்யும் குறும்புத்தனங்கள் மற்றும் செயல்பாடுகள் மக்களிடையே பேசுபொருளாகேவ மாறின. மேலும், அவரது வீடியோக்கள் சோசியல் மீடியாவில் அதிக அளவில் ட்ரெண்ட் ஆகியும் வந்தன. இதனையடுத்து, தனது குடும்பத்தினரை விட்டு பிரிந்து இருக்க முடியவில்லை என கவலை தெரிவித்துவந்த முத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனிடம் சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

முன்னதாக, தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லை எனவும் அதனால் தான் வீட்டுக்கு செல்ல வேண்டும் எனவும் பிக்பாஸிடம் கண்ணீருடன் கோரிக்கை வைத்திருந்தார் முத்து. இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, வீடு திரும்பிய அவர் தனது மகனுடன் தான் இருக்கும் வீடியோவையும் அவர் பதிவிட்டிருந்தார்.

எப்போதும், தனது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் வாஞ்சையுடன் பேசும் GP முத்து, அண்மையில் அவர்களுடன் உணவகத்திற்கு சென்றிருக்கிறார். அங்கே, குழந்தைகள் அமர்ந்திருக்க அனைவருக்கும் உணவை அன்போடு பரிமாறுகிறார் GP முத்து. இந்த வீடியோவை அவர் தனது யூடியூப் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார்.

குழந்தைகள் மற்றும் நண்பர்களுக்கு GP முத்து அன்புடன் உணவை பரிமாறும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | T20 World Cup: அடித்து ஆடும் மழை.. ICC வச்சிருக்கும் பக்கா பிளான்.. ஆனா அதுவும் இந்த போட்டிகளுக்கு மட்டும் தானாம்..!

GP MUTHU, BIGG BOSS TAMIL 6, BIGG BOSS GP MUTHU, FOOD, FAMILY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்