GP Muthu: "நாளைக்கு என்ன நடக்குதுன்னு பாருங்க".. GP முத்துவின் பேச்சை கேட்டு கலகலத்துப்போன போட்டியாளர்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உடனடியாக தனது உடைகளை கொடுக்கும்படி பிக்பாஸிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் GP முத்து.

GP Muthu: "நாளைக்கு என்ன நடக்குதுன்னு பாருங்க".. GP முத்துவின் பேச்சை கேட்டு கலகலத்துப்போன போட்டியாளர்கள்..!
Advertising
>
Advertising

Also Read | Bigg boss 6 tamil : "ஒரு வேளை சத்துணவு சாப்பாடாச்சும் கிடைக்கும்னுதான் School-ல சேர்த்தாங்க!".. மைனா நந்தினி உருக்கம்.!.. கதையை தொடர விடுவார்களா ஹவுஸ்மேட்ஸ்..?

கடந்த வாரம் துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 பல்வேறு திருப்பங்களுடன் சென்றுகொண்டிருக்கிறது. தினந்தோறும் பல்வேறு வேடிக்கையான விவாதங்கள், சுவாரஸ்யமான டாஸ்க்குகள் என பிக்பாஸ் வீடு களைகட்டியுள்ளது. இதன் காரணமாக மக்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் பிக்பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சியை ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

GP Muthu asks Biggboss to bring his dresses soon

இந்த சீசனில் யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி,  KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, மைனா நந்தினி உள்ளிட்ட 21 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

பிக்பாஸ் வீட்டுக்குள் எப்போதும் ஜாலியாக வலம்வரும் GP முத்து தற்போது வீட்டின் கேப்டனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கலகலப்பான பேச்சும், வெள்ளேந்தியான குணமும் GP முத்துவுக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுக்கொடுத்திருக்கிறது. இதனாலேயே பிக்பாஸ் வீட்டுக்குள் அவர் செய்யும் வினோதமான நடவடிக்கைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகின்றன.

இதனிடையே அவர் அவ்வப்போது தனது உடைகளை கொடுக்கும்படி பிக்பாஸிடம் கோரிக்கை வைத்து வருகிறார். முன்னதாக, தன்னிடத்தில் சிலுக்கு சட்டையெல்லாம் இருப்பதாகவும் அவை தனக்கு வேண்டும் எனவும் கேமரா முன்னிலையில் அவர் பேசியிருந்தார். 

இந்நிலையில், உறங்கும் பகுதியில் GP முத்து, அமுதவாணன் உள்ளிட்ட போட்டியாளர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது GP முத்துவிடம் அமுதவாணன் ஜாலியாக பேசிவிட்டு செல்ல, அங்கிருந்த கேமராவை பார்த்த GP முத்து,"இதையெல்லாம் நல்லா திரும்பி திரும்பி பாக்குறது. நாளைக்கு மட்டும் என் சட்டை வரலைன்னா.. நான் கோவணத்தை கட்டிடுவேன்" எனச் சொல்ல அங்கிருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.

மேலும், போட்டியாளர்களிடம் பேசும் GP முத்து,"பச்சை துண்டு வச்சிருக்கேன். நாளைக்கு ட்ரெஸ் வரலைன்னா எடுத்து கட்டிடுவேன்" எனச் சொல்ல அனைவரும் வெடித்துச் சிரிக்கிறார்கள்.

Also Read | Tea போடுறதுல கின்னஸ் ரெக்கார்டா..? அதிர்ந்து போன அதிகாரிகள்.. அப்படி என்னப்பா செஞ்சாங்க.?

BIGG BOSS, BIGG BOSS TAMIL, BIGG BOSS TAMIL 6, GP MUTHU, VIJAY TELEVISION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்