Biggboss6 Tamil: ஆயிஷா எங்க.? மைனாவின் பதிலை கேட்டு பதறிய GP முத்து.. அந்த மனசு தான் சார்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிக்பாஸ் வீட்டுக்குள் பாத்ரூமில் படுத்திருந்த ஆயிஷாவை உள்ளே சென்று படுக்கும்படி வலியுறுத்தியுள்ளார் GP முத்து.

Biggboss6 Tamil: ஆயிஷா எங்க.? மைனாவின் பதிலை கேட்டு பதறிய GP முத்து.. அந்த மனசு தான் சார்..
Advertising
>
Advertising

Also Read | கடற்கரையில் நடந்துட்டு போயிட்டு இருந்தப்போ.. நீரில் பெண் பார்த்த உருவம்.. "டைனோசர் தல மாதிரியே இருக்குற உருவமா அது??".. மர்மம்!!

கடந்த வாரம் துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 பல்வேறு திருப்பங்களுடன் சென்றுகொண்டிருக்கிறது. தினந்தோறும் பல்வேறு வேடிக்கையான விவாதங்கள், சுவாரஸ்யமான டாஸ்க்குகள் என பிக்பாஸ் வீடு களைகட்டியுள்ளது. இதன் காரணமாக மக்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் பிக்பாஸ் 6 வது சீசன் நிகழ்ச்சியை ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

GP Muthu asks Ayeesha to sleep in the bedroom in biggboss House

பிக்பாஸ் வீட்டுக்குள் எப்போதும் ஜாலியாக வலம்வரும் GP முத்து தற்போது வீட்டின் கேப்டனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கலகலப்பான பேச்சும், வெள்ளேந்தியான குணமும் GP முத்துவுக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுக்கொடுத்திருக்கிறது. இதனாலேயே பிக்பாஸ் வீட்டுக்குள் அவர் செய்யும் வினோதமான நடவடிக்கைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகின்றன.

வழக்கமாக கலகலப்புடன் இருக்கும் GP முத்து பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் போட்டிகளிலும் முழு முயற்சியுடன் ஈடுபடுகிறார். அதே வேளையில் சக போட்டியாளர்களுடன் பரிவுடனும், தனக்கே உரித்தான பாணியிலும் பேசிவருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் சக போட்டியாளர்களுடன் GP முத்து பேசிக்கொண்டிருக்கும்போது ஆயிஷா எங்கே என கேட்கிறார். அப்போது, அவர் பாத்ரூமில் படுத்திருப்பதாக மைனா நந்தினி சொல்ல, எது பாத்ரூம்லயா? என திடுக்கிட்டு போகிறார் GP முத்து.

உடனடியாக பாத்ரூமிற்கு செல்லும் அவர், அங்கே படுத்திருந்த ஆயிஷாவிடம் "என்னம்மா இங்க வந்து படுத்திருக்க? உள்ள வாம்மா, இங்க ஏசி கூட இல்ல" என பரிவுடன் பேசுகிறார். அப்போது ஆயிஷா,"உள்ள சத்தமா இருக்கு.. மூச்சு விட முடியல, நான் இங்கேயே படுத்துக்குறேன்" என்கிறார். "நீ உள்ள வந்து படு.. நான் அமைதியா இருக்க சொல்றேன் எல்லார்கிட்டயும். வாம்மா" என GP சொல்ல, அப்போது மைனா உள்ளே வருகிறார்.

அவர் ஆயிஷாவை சமாதானப்படுத்த, "எந்திரிம்மா, யாரும் பேச மாட்டாங்க வா.. செருப்பை போட்டுக்கோ" என முத்து அவரை உள்ளே அழைத்துச் செல்கிறார்.

 

Also Read | "ஒரு உயிரை காப்பாத்திட்டோம்".. மாரடைப்பால் சரிந்த விவசாயி.. டக்குன்னு போலீஸ் அதிகாரி செஞ்ச உதவி.. சல்யூட் போட வைக்கும் வீடியோ..!

BIGG BOSS, BIGG BOSS TAMIL, BIGG BOSS TAMIL 6, VIJAY TV, GP MUTHU, AYEESHA, BIGGBOSS HOUSE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்