'ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மாற்றப்படுகிறதா'?... 'பரபரப்பான செய்தி'... ஓபிஎஸ் வைத்த கோரிக்கை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை அங்கிருந்து மாற்றப்படுவது என்ற செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில், அதனை உடன் கைவிட வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் இருந்தபோது ஓமந்தூரார் கட்டடத்தை எழுப்பி அதைத் தலைமைச் செயலகமாக மாற்றியது. ஆனால் அதற்குப் பின்பு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அதை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றியமைத்தார். தற்போது இக்கட்டான கொரோனா நோய்த்தொற்று காலத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.

இந்நிலையில் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகமாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் பரவியதை அடுத்து அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வருக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை அங்கிருந்து மாற்றப்படுவது என்ற செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில், அதனை உடன் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்