'திடீரென அலறிய சிறுவன்'... 'காது வழியாக வந்த கம்பி'... 'கண்ணு ஒண்ணும் இல்லடா'... வாவ் போட வைத்த அரசு மருத்துவர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தற்போதைய கொரோனா நேரத்தில் அரசு மருத்துவர்களின் சேவையை நாடே பாராட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில், தக்க சமயத்தில் சிறுவனின் உயிரைக் காப்பாற்றி பலரது பாராட்டை அரசு மருத்துவர்கள் பெற்றுள்ளார்கள்.
திருப்பூர் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ். இவருடைய மகன் ரிதிகேஷ்வரன். 7 வயது சிறுவனான இவன், மூன்றாம் வகுப்பு படித்து வருகிறான். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சிறுவன் வீடு அருகே உள்ள ஒரு மரத்தில் தொட்டில் கட்டி விளையாடிக் கொண்டிருந்தான். அதே போன்று நேற்று முன்தினம் சிறுவன் மரத்தில் ஏறி தொட்டில் கட்டும் போது எதிர்பாராதவிதமாக மரக்கிளை ஒடிந்து கீழே விழுந்தான்.
அப்போது கீழே கிடந்த தொட்டில் கட்டும் கொக்கி கம்பி அவனுடைய வலது கழுத்து பகுதியில் குத்தி வலது காது வழியாக வெளியே வந்தது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவனது பெற்றோர், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ரிதிகேஷ்வரனை ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள்.
அங்குச் சிறுவனைக் குழந்தைகள் அறுவை சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் அனுமதித்து சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் செய்தனர். அப்போது சிறுவனின் கழுத்து பகுதியில் குத்தி இருந்த கம்பி 12 மி.மீ. அகலமும், 2 அடி நீளமும் உள்ள கொக்கி கம்பி என்பது தெரியவந்தது. இதையடுத்து மின்னல் வேகத்தில் செயல்பட்ட மருத்துவர்கள், உடனடியாக சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து கொக்கி கம்பியை அகற்ற முடிவு செய்தார்கள்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த கோவை அரசு மருத்துவமனை டீன் காளிதாஸ், மருத்துவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். அதன்படி குழந்தைகள் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் மருத்துவர் ரங்கராஜன் தலைமையில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்கள். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், சிறுவனின் கழுத்து பகுதியில் சிக்கியிருந்த கொக்கி கம்பியை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.
தற்போது அந்த சிறுவன் உடல்நிலை தேறி நல்ல நிலையில் உள்ள நிலையில், அவனது புகைப்படத்தையும் மருத்துவர்கள் வெளியிட்டார்கள். தக்க நேரத்தில் விரைந்து செயல்பட்டு சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்குச் சிறுவனின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்கள். அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அது நமக்குள்ள நடந்தா போதும்'... 'வீட்டில் கர்ப்பிணி மனைவி'... 'ஹால்டிக்கெட் வாங்க போறேன்னு வந்த மாணவி'... தில்லாலங்கடி இளைஞரின் பகீர் திட்டம்!
- 'மூச்சுத்திணறல்' மூலமாகவே 'அதிக உயிரிழப்பு...' 'ஆபத்தை' முன்கூட்டியே உணர்த்தும் 'அற்புதக் கருவி...' இதுதான் 'உயிரிழப்பை' கட்டுப்படுத்த 'ஒரே சிறந்த வழி...'
- "ஹாஸ்பிட்டல் பில் பார்த்ததும் ஒரு நிமிஷம் என் உடம்பெல்லாம் ஆடிபோயிடுச்சு!".. கொரோனா சிகிக்சை பெற்ற நோயாளியை... தலைசுற்ற வைத்த கட்டணம்!
- ‘நம்மள அந்த பையன் பாத்துட்டான்’.. ‘வீட்டுல சொல்லிட்டா அவ்ளோதான்’.. பகீர் கிளப்பிய சம்பவம்.. சிக்கிய ‘காதல்ஜோடி’!
- 'மண்டையை' பிளந்து நடக்கும் 'ஆபரேஷன்' ஒருபுறம்!.. இன்னொருபுறம் 'கூலாக' மூதாட்டி பார்த்த 'வேலை'!.. வைரல் ஆகும் புகைப்படம்!
- "இந்த பாம்பு தான் என்னை கடித்தது!".. நாக பாம்பை உயிரோடு பையில் போட்டு மருத்துவமனைக்கு அழைத்து வந்த இளைஞர்!
- ‘எந்த குடும்பத்துக்கும் இப்டியொரு சோதனை வரக்கூடாது’.. கதறியழுத உறவினர்கள்.. நெஞ்சை ரணமாக்கிய சோகம்..!
- 'செயற்கை கால்களோடு நடந்து...' 'தன் உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்காக...' 2.74 கோடி ரூபாய் நிதி திரட்டிய சிறுவன்....!
- ‘டீ வாங்க போன மனைவி’.. அரிவாளுடன் மருத்துவமனைக்குள் நுழைந்த ‘மர்மகும்பல்’.. மதுரையில் நடந்த பயங்கரம்..!
- 'இ-பாஸ்' வாங்காம 'ஊர் பக்கம்' போய்டாதிங்க... 'சென்னையிலிருந்து திருப்பூருக்கு போன...' '4 பேருக்கு' நேர்ந்த கதி...