தமிழகத்தில் 13 இடங்களில் ‘புதிய’ பேருந்து நிலையம்.. லிஸ்ட்ல உங்க ஊரு இருக்கான்னு பாருங்க..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்நாட்டில் 13 இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Advertising
>
Advertising

தமிழ்நாட்டில் மக்களுக்கு போக்குவரத்து சேவையை எளிதாக்கும் வகையில் புது, புது வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதனால் நாளுக்கு அரசு பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் ரூ.424 கோடி மதிப்பில் 13 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் அமைய உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சங்கரன்கோவில், திருமங்கலம், மன்னார்குடி, மயிலாடுதுறை, கடலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திண்டிவனம், திருத்தணி, திருவண்ணாமலை, ஈரோடு, கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய 13 இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உட்கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம், உள்ளாட்சி அமைப்புகளின் நிதியுதவியுடன் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்பட உள்ளதாகவும், இந்த புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் பணி விரைவில் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

BUSSTAND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்