”பொங்கல் பெருமை.. ஜல்லிக்கட்டு வீரம்” - ‘தமிழ்நாடு’ என குறிப்பிட்டு ஆளுநர் வெளியிட்ட பொங்கல் வாழ்த்து!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆளுநர் ஆர்.என்.ரவி , “தமிழ் மக்களின் பெருமையை பறைசாற்றும் பண்டிகை பொங்கல்” என குறிப்பிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில் ‘தமிழ்நாடு ஆளுநர்’ என கூறியிருப்பது வைரல் ஆகியுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொங்கல் என்பது நம் தமிழ் மக்களின் பெருமையை பறைசாற்றும் பண்டிகை, பல்லாயிரம் ஆண்டுகால கலாசாரம், பாரம்பரியத்தை பொங்கல் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம். நமது வீரத்தை ‘ஜல்லிக்கட்டு’ விழாவாக இந்த நாளில் கொண்டாடுகிறோம். இந்த அறுவடை திருநாளில் எங்கிருந்தாலும், எல்லா கிராமங்களிலும், சூரிய கடவுள் மற்றும் நம் விருப்ப தெய்வங்களை கைகூப்பி வணங்கி பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு மரியாதை செலுத்துவோம்.” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழ்நாடு என சொல்வதை விட தமிழகம் எனச் சொல்வது சரியாக இருக்கும் என்று ஆளுநர் ரவி குறிப்பிட்ட விவகாரம் தமிழகத்தில் பல்வேறு கட்சிகளிடையே பல எதிர் கருத்துக்களை உருவாக்கியது. இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் இருந்து இன்ற வெளியாகியுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தி குறிப்பில் ‘தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிடப்பட்டுள்ள விஷயம் கவனம் பெற்றுள்ளது.
குறிப்பாக “பொங்கல் திருநாளில் நமது வீரத்தை ஜல்லிக்கட்டு விழாவாக கொண்டாடுகிறோம்” என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ள விஷயம் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Rajinikanth: TN ஆளுநர் RN ரவி-யுடனான சந்திப்பின் பின்னணி என்ன? ரஜினிகாந்த் சொன்ன விஷயம்.!
- தமிழக மீனவருக்கு அடிச்ச ஜாக்பாட்.. வலையில் சிக்குன ராட்சத அதிர்ஷ்டம்!.. விலை மட்டும் எவ்வளவு தெரியுமா?
- அரசு பேருந்துகள் நிற்குமிடத்தில் உள்ள ஹோட்டல்களில் சைவ உணவு மட்டுமே தயார் செய்யவேண்டும்.. வெளிவந்த புதிய அறிவிப்பு..!
- சர்க்கார் சுந்தர் ராமசாமி ஸ்டைலில் ஓட்டுப்போட.. அமெரிக்காவில் இருந்து வந்த இளைஞர்!
- திருமணத்தை மீறிய உறவு.. ஆண் நண்பருடன் வாக்குவாதம்.. பெண் வனக்காவலருக்கு நடந்த விபரீதம்..!
- நீட் விவகாரம்.. ஆளுநர் என்ன போஸ்ட் மேனா? .. வானதி சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டு
- ஹனிமூன் பீரியட் முடிந்தது! அக்னி பரிட்சைக்கு தயாரான ஸ்டாலின்.. அதிகாரிகளின் மீது கடுப்பில் முதல்வர்
- பொங்கல் தொகுப்பு ஊழல் புகார்.. அதிகாரிகள்.. நிறுவனங்கள் மீது பாயப்போகும் கடும் ஆக்ஷ்ன்.. ஸ்டாலின் உத்தரவு
- நாங்க பொங்கலும் கொண்டாடுவோம், அக்யூஸ்ட்டுக்கு பொங்கலும் வைப்போம்.. அதிரவைத்த ஐஜி
- தமிழ்நாட்டில் எலான் மஸ்க்-ன் டெஸ்லா? வாங்க.. வாங்க.. நம்ம பசங்கலாம் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க!