'வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசு...' - ஒப்புதல் அளித்த தமிழக ஆளுநர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு மொத்தம் 69% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு வேண்டும் என்பது பாமகவின் நெடுநாள் கோரிக்கை. பின்னர் மிக பிற்படுத்தபட்டோர் பிரிவில் உள் இடஒதுக்கீடு தேவை என பாமக கோரியது.
இந்த கோரிக்கையை ஏற்று மிக பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5%; சீர் மரபினருக்கு 7% உள் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் இந்த இடஒதுக்கீடு தற்காலிகமானது எனவும், 6 மாதத்திற்கு பின்னர் சாதிவாரியான புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு மாற்றியமைக்கப்படும் என சட்டசபையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்ட மசோதாவுக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழக' சட்டமன்ற தேர்தல்... உறுதியான 'அதிமுக' - 'பாமக' கூட்டணி!!... ஒதுக்கப்பட்ட 'தொகுதி'கள் எத்தனை??..
- VIDEO: '40 வருஷ உழைப்பு நிறைவேறிருக்கு...' 'அடுத்து இன்னும் கொஞ்சம் சேர்த்து வாங்கிடலாம்...' 'கண்ணீர் விட்டு அழுத அன்புமணி...' - வைரல் வீடியோ...!
- 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு இன்றி பாஸ்.. முதல்வர் பழனிசாமி ‘அதிரடி’ அறிவிப்பு..!
- அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது வரம்பு உயர்வு.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..!
- ‘பரபரக்கும் தேர்தல் களம்’!.. முதல்வர், துணை முதல்வர் போட்டியிடும் தொகுதி என்ன..? விருப்ப மனு தாக்கல்..!
- 'இடைக்கால பட்ஜெட்'... 'குடும்ப தலைவர் விபத்தில் இறந்தால் ரூ.4 லட்சம்'... தமிழக அரசின் 'அம்மா காப்பீடு'!
- 'இது நூறு வருஷ கனவு...' 'காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு...' - அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வர்...!
- 'மெட்ரோ ரயில் கட்டணம் அதிரடியாக குறைப்பு'... '50 சதவீதம் தள்ளுபடி'... முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு!
- கொரோனா ஊரடங்கு காலத்தில் பதியப்பட்ட ‘10 லட்சம்’ வழக்குகள் வாபஸ்.. முதல்வர் ‘அதிரடி’ அறிவிப்பு..!
- 'நீங்கள் அதிகாரிகளை தேடி போக வேண்டாம்'... 'மக்கள் குறைகளை கேட்க மக்களை தேடி வரும் அதிகாரிகள்'... முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!