30 கிராம் எடைகொண்ட ‘நீர்’ செயற்கைக்கோள்..! அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கருர் அரசு பள்ளி மாணவர்கள் 30 கிராம் எடைகொண்ட ‘நீர்’ செயற்கைக்கோளை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.

விக்ரம் சாராபாயின் 100 -வது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஸ்பேஸ் கிட்ஸ் என்ற போட்டியை அறிவித்து இருந்தது. மாணவர்களால் உருவாக்கப்படும் 30 கிராம் எடைகொண்ட செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் பல்வேறு அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் போட்டி நடத்தப்பட்டது. அதில் கருர் மாவட்டம் வெள்ளியணை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆசிரியர் தனிபால் வழிகாட்டுதலின் அடிப்படையில் 30 கிராம் எடையுள்ள ‘நீர்’ என்ற செயற்கைகோளை உருவாக்கியுள்ளனர்.

நீர்நிலைகளை ஆக்கிரமித்து வரும் கருவேல மரங்களை அழிக்கும் நோக்கில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது என தெரிவித்துள்ளர். வரும் 11 -ம் தேதி ஹீலியம் பலூன் மூலம் செயற்கைக்கோள் வானில் செலுத்தப்பட்டு, பலூன் வெடித்ததும் பாரசூட் மூலம் செயற்கைக்கோள் பூமியை வந்தடையும். அப்போது செயற்கைக்கோள் பூமியை படமெடுத்து அனுப்பும் தகவல்களை கீழே உள்ள கட்டுப்பாட்டு அறையின் மூலம் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

GOVERNMENT, SCHOOL, STUDENTS, SATELLITE, KARUR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்