"எவரும் சொல்லாமலே".. அரசு பள்ளி மாணவியின் அட்டகாசமான குரல்.. பள்ளிக்கல்வித்துறை பகிர்ந்த வீடியோ.. வாழ்த்தும் நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரசுப்பள்ளி மாணவி ஒருவர் 'தென்றல் வந்து தீண்டும் போது' பாடலை பாடும் வீடியோவை தமிழக பள்ளிக்கல்வித்துறை பகிர்ந்திருக்கிறது. மாணவரின் குரல் வளத்தை பார்த்து பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தமிழக அரசு பள்ளிகளில் 'கலை திருவிழா' நடத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். அதன்படி பள்ளிக்கல்வித் துறையின்கீழ் இயங்கி வரும் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளும் இந்த கலைத் திருவிழாவில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
6 முதல் 8 ஆம் வகுப்பு, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஓவியம், கேலிச்சித்திரம், நவீன ஓவியம், களிமண் சிற்பம், மணல் சிற்பம், புகைப்படம் எடுத்தல், நாட்டுப்புறப்பாட்டு, மெல்லிசை, செவ்வியல் இசை என பல்வேறு கலைத்திறன்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டிகளில் வட்டார அளவில் தேர்வாகும் தனிநபர் மற்றும் குழு மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கும். பின்னர், அதிலிருந்து மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க இருக்கும் தனிநபர் மற்றும் குழுக்கள் தேர்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனவரி மாதம் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் 'கலையரசன்', 'கலையரசி' என்ற விருதுகளும் வழங்கப்பட இருக்கின்றன. மேலும், தமிழக அளவில் தரவரிசையில் முதல் 20 இடங்களை பிடிப்பவர்கள் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அனுப்பிவைக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசு பள்ளி மாணவி ஒருவர் 'தென்றல் வந்து தீண்டும் போது' பாடலை உணர்ச்சியுடன் பாடியிருக்கிறார். கலை திருவிழாவின் ஒரு பகுதியாக இந்த மாணவி பாடிய வீடியோவை தமிழக பள்ளிக்கல்வித்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது. மேலும், அந்த பதிவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியையும் டேக் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த வீடியோ நெட்டிசன்கள் பலரின் கவனத்தை ஈர்த்ததுடன் பலரும் மாணவியின் குரல் வளத்தை பாராட்டுவதோடு வருங்காலத்தில் நல்ல நிலையை அடைய வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- என்ன வாய்ஸ்-டா சாமி.. அசத்திய அரசுப்பள்ளி மாணவன்.. பள்ளிக்கல்வி துறை பகிர்ந்த சூப்பர் வீடியோ..!
- கொரோனாவால் உயிரிழந்த பெற்றோர்கள்.. வீடும் கைவிட்டு போன நேரத்தில்.. 27 லட்சம் கடனை செலுத்தி மாணவியை நெகிழ வைத்த பூனாவாலா!!
- காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு.. இரவு நேரத்தில் இளைஞரால் நேர்ந்த கொடூரம்.. கூட்டம் கூடியதும் இளைஞர் செஞ்ச அதிர்ச்சி செயல்!!
- "அந்த சிரிப்புக்கு பின்னாடி இப்படி ஒரு துயரமா?"..டோல்கேட்டில் தின்பண்டம் விற்று வைரலான கல்லூரி மாணவி..! படிப்பை தொடர முடியாத அவலம்
- ‘காதலில் எல்லாமே நியாயம்தான்.!’ .. ஆணாக மாறி மாணவியை திருமணம் செய்த ஆசிரியை.!
- "ஸ்கூல் முடிஞ்சா நேரா அங்க தான்".. பள்ளி சீருடையில் தாய்க்கு உதவியாக கடலை வியாபாரம்.. மாணவியின் மனம் நெகிழ வைக்கும் பின்னணி!!
- தேசிய சுற்றுலா சென்ற அரசு பள்ளி மாணவர்கள்.. வழியனுப்பி வைத்த மேயர் பிரியா.. சபாஷ் சொல்ல வைக்கும் பின்னணி..!
- 32 வயசு வித்தியாசம்.. கல்யாணம்னு ஒன்னு நடந்தா அவருகூட தான்.. ஆசிரியரை காதலித்து கரம்பிடித்த கல்லூரி மாணவி..!
- "நிம்மதியே இல்ல".. முதல்வரை பாக்க வீட்டில் இருந்து தனியாக சென்ற மாணவன்.. கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்.!!!
- "எங்க மக இன்னும் சாகல".. இறந்தும் 9 பேர் உயிரை காத்த மாணவி.. மனதை ரணமாக்கும் சோகம்.. உருக்க பின்னணி!!