அடி தூள்.. இனி 10, 20₹ நாணயங்களை வாங்கித்தான் ஆகணும்.. அரசு பேருந்து நடத்துனர்களுக்கு பறந்த உத்தரவு.. முழுவிபரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக அரசு பேருந்து நடத்துனர்கள் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை பெற்றுக்கொள்ள தயங்கக்கூடாது என போக்குவரத்து கழகம் தெரிவித்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | "எல்லோருக்கும் ரொம்ப நன்றி".. தினேஷ் கார்த்திக்கின் உருக்கமான பதிவு.. ரசிகர்களிடையே ஏற்பட்ட பரபரப்பு..!

தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பிற இடங்களுக்கு பயணம் செய்பவர்கள் இந்த சிக்கலை எதிர்கொண்டிருக்கலாம். குறிப்பாக கிராம பகுதிகளில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்றே பலரும் நினைக்கின்றனர். பெட்டிக்கடை துவங்கி, பேருந்துகள் வரை யாருமே இந்த நாணயங்களை வாங்குவதில்லை. காரணம் கேட்டால் தங்களால் இதனை மாற்ற முடியாது எனவும், இவை செல்லாது எனவும் உருட்டுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர் மக்கள். இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும் நிலைமை இன்னும் சரியாகவில்லை என்பதே எதார்த்தமாக இருக்கிறது.

இந்திய ரிசர்வ் வங்கி முதன்முதலில் கடந்த 2005 ஆம் ஆண்டு 10 ரூபாய் நாணயங்களை புழக்கத்தில் கொண்டுவந்தது. தாள்களில் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை விட அதிக காலம் பயன்படுத்திட முடியும் என்பதால் இந்த 10 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதனை தொடர்ந்து 14 விதமான 10 ரூபாய் நாணயங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டிருக்கின்றன.

இவற்றில் ஒவ்வொரு வகை 10 ரூபாய் நாணயமும் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டவை. உதாரணமாக ஒரு வகை 10 ரூபாய் நாணயத்தில் ரூபாய் சின்னம் (₹)இருக்கும் மற்றொன்றில் ரூபாய் சின்னம்(₹)இருக்காது. ஆகவே ரூபாய் சின்னம் இல்லாத நாணயங்கள் செல்லாது என்ற முடிவுக்கு மக்களே வந்துவிட்டனர். காலப்போக்கில் எந்த 10 ரூபாய் நாணயங்களையும் மக்கள் வாங்க யோசிக்கத் துவங்கிவிட்டனர். இதேபோல், ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய 20 ரூபாய் நாணயங்களையும் வாங்க மக்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

இந்நிலையில், அரசு பேருந்து நடத்துனர்களுக்கு புதிய உத்தரவை போக்குவரத்து கழகம் பிறப்பித்துள்ளது. அதில், "அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் 10, 20 ரூபாய் நாணயங்களை மறுக்காமல் பெற்று பயணச் சீட்டை நடத்துனர்கள் வழங்க வேண்டும். நாணயங்களை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவிக்கும் நடத்துனர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர்.

Also Read | பிரபல கிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடையா??.. இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு??.. வெளியான பரபரப்பு தகவல்!!

TN GOVT, GOVERNMENT ORDER, BUS CONDUCTORS, 10 AND 20 RUPEES COIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்