சபாஷ்! தமிழக அரசு ரேஷன் கடைகளில் எடுத்த சூப்பர் முடிவு.. இரண்டு மாநகரங்களுக்கு இப்ப குட்நியூஸ்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை: நியாய விலைக்கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.

Advertising
>
Advertising

சிறு தானியங்களையம் நியாய விலைக்கடைகள் மூலம் விற்பனை:

தமிழகத்தில் செயல்படும் நியாயவிலை கடைகளில் தானியவகைகளில் கோதுமை மட்டுமே கொடுக்கப்படும். இந்நிலையில் தற்போது ராகி, கம்பு, திணை, குதிரைவாளி, சாமை, வரகு உள்ளிட்ட சிறு தானியங்களையம் நியாய விலைக்கடைகள் மூலம் விற்பனை செய்ய தமிழக அரசு முடிவெடுத்திருந்தது.

தற்போது அதனை செயல்படுத்தும் விதமாக தமிழக அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. மேலும், முதற்கட்டமாக சோதனை அடிப்படையில், சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சிறுதானியங்கள் விற்பனை செய்யவேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

சூப்பராக மாறப் போகும் சென்னை புறநகர்! அமையப் போகும் வேறலெவல் வசதி.. மாஸ்டர் பிளான் ரெடி

சிறுதானியங்களின் விலையை நிர்ணயம் செய்ய கூட்டுறவு சங்க பதிவாளர் தலைமையில் குழு:

இவைகூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயிகளிடம் இருந்து சிறுதானியங்கள் கொள்முதல் செய்து நியாயவிலை கடைகளில் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது. அதோடு, சிறுதானியங்களின் விலையை நிர்ணயம் செய்ய கூட்டுறவு சங்க பதிவாளர் தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிட்டுள்ளது.

பக்கத்து வீட்டுப் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த கணவன்.. அதற்கு மனைவி கொடுத்த தரமான பதிலடி

தமிழ்நாடு அரசு உத்தரவு:

தமிழக அரசின் இந்த நடவடிக்கை மூலம் விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கவும், சிறு தானியங்களின் மதிப்பை கூட்டவும் முடியும் எனவும் கூறப்படுகிறது. மேலும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் அந்தந்த மாவட்டங்களில் ஒரு குழு அமைக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவு. இந்த சிறு தானியங்கள் அரை கிலோ மற்றும் ஒரு கிலோ பாக்கெட்டுகள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளதாக கூறபட்டுள்ளது.

 

 

RATION SHOP, RATION SHOP NEWS, ரேஷன் கடை செய்திகள், ரேஷன் கடை, TAMIL NADU, SALE, CEREALS, ரேஷன், சிறுதானியங்கள், நியாய விலைக்கடை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்