கத்தாரில் களைகட்டிய கால்பந்து உலகக்கோப்பை.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அமைச்சர்.. முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை அரசு கேபிள் டிவியில் இலவசமாக பார்க்கலாம் என தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார். இதனால் கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து. சாதாரண போட்டிகளுக்கே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அப்படியிருக்க உலகக்கோப்பை என்றால் சொல்லவா வேண்டும்? மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் கால்பந்து உலகக்கோப்பை நடைபெற்ற நிலையில், தற்போது கத்தாரில் துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் ஆட்டத்தில் கத்தாரை எதிர்த்து ஈகுவேடார் அணி விளையாடியது. இதில் 2 - 0 என்ற கோல் கணக்கில் ஈகுவேடார் அணி வெற்றிபெற்றது. இதனையடுத்து, பலம் பொருந்திய அர்ஜென்டினாவை சவூதி அரேபியா வீழ்த்தி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தது. அதேபோல், ஜெர்மனியை ஜப்பான் தோற்கடித்தது பலரையும் திக்குமுக்காட செய்திருக்கிறது. இப்படி எதிர்பாராத திருப்பங்களுடன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, உலகக்கோப்பை போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சி சேனலை அரசு கேபிள் டியில் இலவசமாக பார்க்கலாம் என அமைச்சர் அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"தமிழ்நாட்டில் பெருகிவரும் கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு நற்செய்தி. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சந்தாதாரர்களின் கோரிக்கையை ஏற்று, கத்தாரில் நடைபெற்று வரும் FIFA WORLD CUP 2022 போட்டிகளை அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் SPORTS 18 சேனலில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு கால்பந்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Also Read | ஷ்ரத்தா வழக்கை போலவே நடந்த பயங்கரம்.. இளம்பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர் செஞ்ச பகீர் காரியம்..!
மற்ற செய்திகள்
ஷ்ரத்தா வழக்கை போலவே நடந்த பயங்கரம்.. இளம்பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர் செஞ்ச பகீர் காரியம்..!
தொடர்புடைய செய்திகள்
- அந்த மனசு தான் சார்.. மேட்ச் முடிஞ்ச அப்பறம் ஜப்பான் ரசிகர்கள் செஞ்ச காரியம்.. நெகிழ்ந்துபோன அதிகாரிகள்.. வைரல் வீடியோ..!
- என்னப்பா Reels-ஆ.. எனக்கும் காட்டு.. பாகனிடம் அடம்பிடித்த யானை.. செம்ம கியூட்டான வீடியோ..!
- 2200 ரூபாய் கொடுத்து 2 ஆணுறை வாங்கிய நபர்.. நேரம் பார்க்க ஆசைப்பட்டவருக்கு நேரம் சரியில்ல..!
- ‘அது உண்மை இல்லை’!.. ஹர்திக் பாண்ட்யா வெளியிட்ட ‘பரபரப்பு’ அறிக்கை.. மும்பை ஏர்போர்ட்டில் என்ன நடந்தது..?
- 'பெண்கள் 'அந்த' விஷயத்துல ரொம்ப கஷ்டப்படுறாங்க'!.. வேற லெவலில் சிந்தித்த அரசு!.. அதிரடி அறிவிப்பால் வாயடைத்துப் போன உலக நாடுகள்!
- காபூலில் உயிர் தியாகம் செய்த அமெரிக்க வீரர்களின்... இறுதிச்சடங்கில் அதிபர் பைடன் செய்த மோசமான செயல்!.. வைரலாகும் வீடியோ!
- இது 'யார்' கையில கட்டியிருக்க 'வாட்ச்' தெரியுமா...? 'விலை ரொம்பலாம் இல்ல...' ஜஸ்ட் 'அஞ்சு கோடி' தான்...! - இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த 'இந்திய' கிரிக்கெட் வீரர்...!
- யாரெல்லாம்பா 'நீரஜ்'னு பெயர் வச்சிருக்கீங்க...? 'உங்களுக்கு ஒரு செம குட் நியூஸ்...' - ச்சே... நமக்கு இந்த 'பெயர்' இல்லையே என 'வருத்தப்படும்' வாலிபர்கள்...!
- ‘வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி’!.. இலவச ரீசார்ஜ் பேக் வழங்க ஏர்டெல் முடிவு.. வெளியான ‘அசத்தல்’ அறிவிப்பு..!
- Video: ‘Honda ஆக்டிவா.. மாதம் ஒரு முறை Mutton பிரியாணி.. பட்டு வேட்டி சேலை’ - இது ‘வேறமாரி’ தேர்தல்!