அதிவேகமாக வந்த சரக்கு லாரி... கவிழ்ந்த கோவை அரசுப்பேருந்து!- பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் பயணித்துக் கொண்டிருந்த அரசுப் பேருந்தின் மீது சரக்கு லாரி ஒன்று மோதி கடுமையான விபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சரக்கு லாரி மோதி அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் காயம் அடைந்துள்ளனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் பேருந்து இன்று காலை சிறுமுகை சாலையில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.

அரசுப் பேருந்து மிகவும் நிதானமாகவே சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஆலங்கொம்பு அருகே கிளை சாலையில் இருந்து வெளியே திரும்பிய சரக்கு லாரி ஒன்று வேகமாக வந்து பேருந்து மீது மோதியது. தூத்துக்குடியில் இருந்து கரிக்கட்டை ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் பேருந்து மொத்தமாக சாய்ந்துவிட்டது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். பேருந்து சாலை ஓரத்தில் இருந்த கடைகள் மீது சாய்ந்தது. அந்த சமயம் மக்கள் யாரும் சாலை ஓரத்தில் இல்லாததால் பெரும் உயிரிழிப்புகள் தவிர்க்கப்பட்டது. விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை.

8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 30 பேர் காயம் அடைந்துள்ளனர். அனைவரும் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சிறுமுகை போலீஸார் தற்போது விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

ACCIDENT, GOVERNMENT BUS, COIMBATORE, BUS ACCIDENT, கோவை அரசுப் பேருந்து, பேருந்து விபத்து, சிசிடிவி காட்சிகள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்