'மாநகரப் பேருந்து மோதியதில்'... 'ஒரேநாளில் 2 பெண்கள் பலி'... 'சென்னையில் நடந்த பரிதாபம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் மாநகரப் பேருந்து மோதியதில், ஒரே நாளில் 2 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரவாயல் பாரதிநகரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மனைவி கலைச்செல்வி (36). இவர், கோயம்பேடு மார்கெட்டிற்கு சென்று மொத்தமாக பூ வாங்கி வந்து, தனது பகுதியில் விற்பனை செய்து வந்தார். வழக்கம்போல் கலைச்செல்வி பூக்கள் வாங்கிவிட்டு, பின்னர் தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வடபழனி துரைசாமி சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த 12 பி பேருந்து ஒன்று, திடீரென மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து அங்கு இருந்த பொதுமக்கள், விபத்தை ஏற்படுத்திய மாநகரப் பேருந்து மற்றும் அதன் ஓட்டுநரை பிடித்து பொதுமக்கள், கிண்டி போக்குவரத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதேபோல், கடந்த புதன்கிழமையன்று இரவு, 50 வயதான மீனா என்பவர், பணி முடிந்து வீடு திரும்புவதற்காக, வடபழனி பேருந்துநிலையத்துக்கு வந்தார். அவர் மீது அங்கு வந்த மாநகரப் பேருந்து மோதியதில் உயிரிழந்தார்.
ஒரே நாளில் வடபழனி பகுதியில் 2 பெண்கள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வடபழனி துரைசாமி சாலையில் திடீரென போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதாலேயே, இதுபோன்ற விபத்துக்கள், அப்பகுதியில் நடப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘லாரி மீது அரசுப் பேருந்து மோதி’.. ‘நொடியில் நடந்த கோர விபத்து’..
- வடபழனியில் 'பேருந்து' மோதி கீழே விழுந்த பெண்..சிகிச்சை பலனின்றி பலி!
- 'நம்ம பாண்டி பஜாரா இது'...'இனிமேல் கார்'ல போக முடியாது'...'இதெல்லாம் யாராவது கவனிச்சீங்களா'!
- '27 வழக்கு.. அதுல 8 கொலைவழக்கு '.. சென்னையில் சிக்கிய பிரபல தாதா.. காவல்துறை எடுத்த அதிரடி முடிவு!
- ‘9 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்’..
- 'அரசு வேலைக்கான ஆர்டர் வந்திருச்சு’... ‘நம்பிச் சென்ற இளம் தம்பதிக்கு’... 'சென்னையில் நடந்த பரிதாபம்'!
- 'மோதிய வேகத்தில் உருக்குலைந்த கார்கள்'.. 'சம்பவ இடத்திலேயே 4 பேருக்கு நேர்ந்த சோகம்'!
- 'சென்னையில் அரசுப் பேருந்து உரசியதால்'... ‘கடை உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்’!
- ‘லாரி மீது நேருக்கு நேர் மோதிய கார்’.. ‘முந்த முயன்றபோது நொடியில் நடந்த பயங்கர விபத்து’..
- ‘ஹெல்மெட் அணியவில்லை என நிறுத்திய போலீஸால்’.. ‘சென்னையில் இளம் பெண்ணுக்கு நடந்த கோர விபத்து’..