குடிபோதையில் பேருந்து ஓட்டுநரின் முகத்தை.. பாட்டிலால் பதம் பார்த்த சக ஓட்டுநர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தாம்பரத்தில் குடிபோதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரின் கண்ணை, மது பாட்டிலால் குத்திய சக ஓட்டுநரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் மாநகரப் பேருந்து பணிமனையில் ஓட்டுநராகப் இருப்பவர் கோவிந்தராஜ். இவர் கடந்த 22 ஆண்டுகளாக  ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் பணியை முடித்துவிட்டு தனது சம்பளம் தொடர்பாக பணிமனை அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த சக ஓட்டுநர் குமார் என்பவர், மதுபோதையில் இருந்துள்ளார். மேலும் மது குடிப்பதற்காக, அங்கு சில மதுபாட்டில்களையும் அவர் வைத்திருந்துள்ளார். பணிமனை அலுவலகத்தில், ஓட்டுநர் குமாருக்கும் கோவிந்தராஜூவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றவே, ஓட்டுநர் குமார் மது அருந்திக் கொண்டிருந்தப் பாட்டிலை உடைத்து கோவிந்தராஜ் முகத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த கோவிந்தராஜை, சக ஊழியர்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காயம்பட்ட கோவிந்தராஜூவுக்கு 18 தையல் போடப்பட்டுள்ளது. கண்ணுக்கு அருகில் மதுபாட்டிலால் குத்தியருப்பதால், நரம்பியல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் உள்நோயாளியாக அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பியோடிய குமார் மீது தாம்பரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

ATTACK, TAMBARAM, BUSDRIVER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்