'அரசு, தனியார் கல்லூரிப் பேருந்துகள்’... ‘அதிவேகத்தில்  மோதிக்கொண்ட’... 'பதறவைக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலம் அருகே தனியார் கல்லூரி மற்றும் அரசுப் பேருந்தும் நொடியில் மோதிக் கொண்ட விபத்தில், தற்போது சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து, பழைய பேருந்து நிலையம் நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இதனை செந்தில்ராஜா என்பவர் இயக்கினார். அப்போது, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அயோத்தியாபட்டினம் நகருக்குள் செல்வதற்காக வலதுபுறமாக திரும்ப முற்பட்டபோது, எதிர்பாராத விதமாக சேலத்திருந்து அவ்வழியாக, அதிவேகத்தில் தனியார் கல்லூரிப் பேருந்து, அரசுப் பேருந்து மீது மோதியது.

சட்டென்று மோதியதில் அரசுப் பேருந்து பயணிகள் மற்றும் கல்லூரி பேருந்தில் வந்த மாணவர்கள் கதறினர். இந்த விபத்தில் அரசுப் பேருந்தில்  பயணம் செய்த 14 பேரும், கல்லூரிப் பேருந்தில் இருந்த 18 மாணவிகள் உட்பட மொத்தம் 37 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். விபத்து குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும்நிலையில், இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது ‘பாலிமர் டிவி’யில் வெளியாகியுள்ளது.

ACCIDENT, SALEM, CCTV, COLLEGE, BUS, GOVERNMENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்