அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து..! கார் ஓட்டுநர் பலியான பரிதாபம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கார் ஓட்டுநர் பரிதாபமாக பலியானார்.
புதுச்சேரியில் இருந்து அரசு பேருந்து ஒன்று இன்று காலை கடலூரை நோக்கி சென்றுள்ளது. அப்போது கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி கார் ஒன்று வந்துள்ளது. கிருமாம்பாக்கம் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அரசு பேருந்து மீது நேருக்கு நேராக மோதியுள்ளது. இந்த விபத்தில் கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பேருந்தில் இருந்தவர்கள் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்த கார் டிரைவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துமனைக்கு அனுப்பியுள்ளனர். இதனை அடுத்து நடத்திய விசாரணையில் விபத்தில் உயிரிழந்த கார் டிரைவர் தரங்கம்பாடியைச் சேர்ந்த பத்மநாபன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சாலையில் வைக்கப்பட்டு இருந்த தனியார் கார் நிறுவனத்தின் தடுப்பு கட்டையே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அதிவேகத்தில் வந்த ரயில் மீது மோதிய ஸ்கூட்டர்'... 'நூலிழையில் தப்பிய சம்பவம்'... வீடியோ!
- 'உங்க மேல 144 ஆர்டர் இருக்கு'.. நடுரோட்டில் புரட்டி எடுத்த ரவுடிகளால் 'காவலர்களுக்கு நேர்ந்த சோகம்'!
- ‘லேண்ட் ரோவரை துரத்தி வந்த 17 அடிநீள #மலைப் பாம்பு’... #வீடியோ!
- 'டிக்கெட் எடுங்க என்று கூறிய கண்டக்டருக்கு'... 'அரசுப் பேருந்தில் போலீசாரால் நேர்ந்த பயங்கரம்'... வீடியோ!
- ‘அரசுப் பேருந்து மீது லாரி மோதி பயங்கர விபத்து’.. ‘3 பேர் பலி; 34 பேர் படுகாயம்’..
- தமிழ்நாட்ல ரொம்பவே 'ஆபத்தான' 846 இடங்கள்... 'மொத' எடம் இதுக்குத்தான்!
- 'தீபாவளிக்காக கொண்டு போன பட்டாசு'...'திடீர்னு வந்த புகை'...'இருவரின் தலை துண்டான பரிதாபம்'!
- ‘பிறந்தநாள் கொண்டாடிவிட்டு’... ‘கல்லூரி நண்பர்கள் திரும்பியபோது’... ‘சென்னையில் நடந்த கோர விபத்து’!
- ‘ரயில் தண்டவாளத்தை கடந்தபோது’... ‘மோசமாக அடிபட்ட யானை உயிரிழப்பு’... 'நெஞ்சை உலுக்கிய சம்பவம்'!
- 'உங்க கணவர் 8-வது மாடியில் இருந்து...'... 'மனைவி எடுத்த விபரீத முடிவு'.. சோகத்தில் ஏசி மெக்கானிக் குடும்பம்!