'செப்டம்பர்ல மட்டும் தான் இனி ஆஃபிஸ் இருக்கும்'!.. பிரபல ஐடி நிறுவனம் அதிரடி!.. ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிஇஓ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்த ஆண்டின் இறுதியில் தங்களது அலுவலகங்கள் திறக்கப்பட்டாலும் 20 சதவிகித ஊழியர்கள் தொடர்ந்து வீடுகளில் இருந்தே பணியாற்றுவார்கள் என பிரபல ஐடி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களுள் ஒன்றான கூகுள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 60 சதவிகித பணியாளர்கள் வாரத்திற்கு 3 நாட்கள் அலுவலகங்களுக்கு வந்து பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். எஞ்சிய 2 நாட்கள் தங்கள் விருப்பம் போல் அவர்கள் பணியாற்றலாம்.

இவர்களை தவிர 20 சதவிகித பணியாளர்கள் தங்களது பணியிடங்களை கூகுளின் வேறு இடங்களுக்கு மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை கூகுள் பணியாளர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் அதன் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். வரும் செப்டம்பர் வரை கூகுளின் ஒரு லட்சத்து 35 ஆயிரம் ஊழியர்களும் தொடர்ந்து வீடுகளில் இருந்தே பணியாற்றுவார்கள் என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்