‘இத்தாலியில் இருந்து வந்த மகன் குடும்பத்தால் பாதிப்பு’... ‘90 வயதில் கொரோனாவை வென்று’... ‘நாட்டுக்கே நம்பிக்கையூட்டிய முதிய தம்பதி’... ‘கைதட்டி ஆரவாரம் செய்த கேரளா மருத்துவர்கள்’... ‘ஆனாலும் செவிலியருக்கு நேர்ந்த சோகம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கேரளாவில் 93 மற்றும் 88 வயது முதிய தம்பதி கொரோனாவை வென்று குணமடைந்திருப்பது நாட்டுக்கே நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது. ஆனாலும் அதில் ஒரு சோகமும் உள்ளது.
இந்தியாவிலேயே கேரளா (234) மற்றும் மகாராஷ்டிரா (238) ஆகிய மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் உள்ளன. இந்நிலையில், இத்தாலியில் இருந்து கடந்த பிப்ரவரி 29-ம் தேதி திரும்பிய மகன், மருமகள் மற்றும் பேரனால், வீட்டில் உள்ள 93 வயதான தாமஸ், அவரின் மனைவி 88 வயதான மரியம்மா ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானார்கள்.
இவர்களுக்கு மார்ச் 8-ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டு, அவர்களது உறவினர்கள் 2 பேர் என மொத்தம் 7 பேர் கோட்டயம் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆரம்ப நாட்களில் முதிய தம்பதியை தனித்தனியே அவரசர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தபோது இருவரும், வீட்டுக்குப் போக வேண்டும் என்று அடம்பிடித்து சாப்பிடாமலும் செவிலியர்களுக்கு ஒத்துழைக்காமலும் இருந்துள்ளனர். மேலும் மூப்பு காரணமாக, நெஞ்சுவலி, சிறுநீரக தொற்று, கடுமையான இருமல், மூச்சுத் திணறல் இருந்ததால், வெண்டிலேட்டர் உதவியும் தேவைப்பட்டது.
பின்னர் சமயோஜிதமாகச் செயல்பட்டு, வயதான தம்பதிகளை ஒரே அறையில் வைத்து சிகிச்சை அளித்ததுடன், அவர்களுக்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள், அவர்களிடம் அன்பாகவும் நடந்துகொண்டனர். சிகிச்சைக்குப் பிறகு, முதிய தம்பதி உட்பட 7 பேருக்கும் கொரோனா டெஸ்ட் செய்ததில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த அவர்களுக்கு கேக் வெட்டி, கைதட்டி மருத்துவர்கள், ஊழியர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
எனினும், இந்த முதிய தம்பதியை அன்பாகக் கவனித்துக்கொண்ட செவிலியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சுகாதாரத்துறை பக்கபலமாக இருந்து சிகிச்சை அளித்து வருகிறது. முதிய தம்பதியினரை கடும் முயற்சி எடுத்து மீட்ட மருத்துவக் கல்லூரி பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சடலங்களை புதைக்க பிரமாண்டமான இடுகாடு...' 'கொரோனா வைரஸினால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மரணம்...' 'புதிய அமைதி பள்ளத்தாக்கு' என பெயர் சூட்டிய ஈராக்...!
- பல ஆயிரம் வருசமா 'ரெண்டு' உயிரினங்கள் உடம்புல வாழ்ந்திட்டு வந்துருக்கு...! 'மூன்றாவது தான் மனுஷன்...' கொரோனா வைரஸ் குறித்து சீன ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை...!
- கொஞ்சம் கூட 'பாலோ' பண்ண மாட்றாங்க... காய்கறி 'சந்தையை' இழுத்து மூடிய கலெக்டர்!
- அதெல்லாம் 'மன்னிப்பு' கேட்க முடியாது... கொரோனா விவகாரத்தில் 'சீனாவுக்கு' செம பதிலடி... 'எந்த' நாடுன்னு பாருங்க!
- கொரோனாவுல இருந்து 'தப்பிக்க' இத மட்டும் 'செஞ்சா' போதும்... 'மீண்டு' வந்த பெண் பேட்டி!
- ‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே?’.. ‘இப்படி ஒரு சமூக இடைவெளியா?’. ‘கொரோனாவையே கதறவிடும் இளைஞர்கள்!’... ‘வீடியோ!’
- ‘அவங்கள நாங்க பாத்துக்குறோம்!’.. பவன் கல்யாணின் கோரிக்கைக்கு மின்னல் வேக ‘ரியாக்ஷன்’.. ‘அதிரடி’ காட்டிய தமிழக முதல்வர்!
- VIDEO: “நில்லு.. கொரோனாவ இங்கயே ஒழிச்சு கட்டிட்டு வீட்டுக்குள்ள வா!”.. ‘வெளிய போய்ட்டு வந்த பெண்ணை வித்யாசமாய் டீல் பண்ணனும் குடும்பம்!’.. ‘வைரல் வீடியோ!’
- ‘2 வாரத்தில் 100 படுக்கைகள் கொண்ட ஹாஸ்பிட்டல்’.. ‘WorkFromHome பார்ப்பவர்களுக்கு ஜியோ மூலம்..!’.. வெளியான அதிரடி அறிவிப்பு..!
- “ரீசார்ஜ் பண்லனாலும் ஏப்ரல் 20 வரை சேவை துண்டிக்கப்படாது!” - ‘பிரபல நெட்வொர்க்கின் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி!’