தங்கம் வரை தாக்கத்தை ஏற்படுத்திய ரஷ்யா-உக்ரைன் போர் .. விலைய கேட்டா ஆடிப்போவீங்க ஆடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

Advertising
>
Advertising

‘ஆமா.. உக்ரைன் சொன்னது உண்மைதான்’.. முதல் முறையா அந்த விஷயத்தை ஒப்புக்கொண்ட ரஷ்யா..!

உக்ரைன் மீது ரஷ்யா 5-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால் இரு நாடுகளிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை நாளுக்குநாள் கடுமையாக உயர்ந்து வருகின்றன.

அதேபோல் பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன. அதனால் உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி, தங்கத்தில் தங்கள் முதலீடுகள் செய்து வருகின்றனர். இதன் காரணமாக இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று (28.02.2022) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.4813-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ. 38,504-க்கு விற்பனையாகிறது. அதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 41,432-க்கு விற்பனையாகிறது.

மேலும் வெள்ளியின் விலை ரூ 1.10 உயர்ந்து ரூ 70.10-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.70,100 ஆக உள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாகவே தங்கத்தின் மீது பலரும் அதிகமாக முதலீடு செய்து வருவதாக சொல்லப்படுகிறது. முன்பு கொரோனா ஊரடங்கு கால கட்டத்திலும் இதேபோல் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்யப்பட்டது. அதனால் அப்போது தங்கத்தின் விலை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

“தண்ணி கொடு.. தண்ணி கொடு..” எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்த போது மயங்கி விழுந்த முன்னாள் அமைச்சர்.. ஆர்ப்பாட்டத்தில் அதிர்ச்சி..!

GOLD PRICE RISE, RUSSIA ATTACKS UKRAINE, ரஷ்யா-உக்ரைன் போர், தங்கம் விலை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்