மக்களே! தங்கம் வெலை 'ஏறுனத' நெனைச்சு 'ரொம்பவும்' வருத்தப்பட்டீங்களே... உங்களுக்கு ஒரு 'ஸ்வீட் ' சர்ப்ரைஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை தற்போது தொடர்ந்து சரிய ஆரம்பித்து இருக்கிறது.

கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருவதால் முதலீட்டாளர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்து விட்டனர். இதனால் இந்தியாவில் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஜெட் வேகத்தில் எகிற ஆரம்பித்தது.சில நாள்களுக்கு முன்பு வரை உச்சத்தில் இருந்த தங்கம் கடந்த 3 தினங்களாக படிப்படியாக குறைய ஆரம்பித்து இருக்கிறது.

அதன்படி சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு பவுன் ரூ. 33 ஆயிரத்து 256-க்கும், ஒரு கிராம் ரூ. 4,157-க்கும் விற்பனை ஆனது. இன்று காலை வர்த்தகத்தின் போது தங்கம் விலை மேலும் சவரனுக்கு 1096 ரூபாய் சரிவடைந்து ஒரு சவரன் ரூ.32 ஆயிரத்து 160க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ரூ.4020 ஆக இருந்தது. இந்த நிலையில் தற்போது மேலும் சரிவடைந்து பிற்பகல் மேலும் சரிவடைந்து, ஒரு சவரன் 32 ஆயிரத்து 104 ரூபாய்க்கும், ஒரு கிராம் 4013 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

 

GOLD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்