50 வருசத்துக்கு முன்னாடி.. தமிழகத்தில் காணாம போன சிலை.. "கடைசி'ல எங்க கெடச்சுருக்கு தெரியுமா??.." திகைத்து போன ஊர் மக்கள்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு, கும்பகோணம் பகுதியில் இருந்து காணாமல் போன சிலை தொடர்பாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.

Advertising
>
Advertising

கும்பகோணம், தண்டந்தோட்டத்தில் உள்ள நடனபுரீஸ்வரர் பகுதியில் சிவன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக இந்த கோவிலில் இருந்த பார்வதி சிலை ஒன்று காணாமல் போயுள்ளது.

இது தொடர்பாக, கடந்த 1971 ஆம் ஆண்டு, தண்டந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மக்கள் பலர் இணைந்து, உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தனர்.

அந்த வழக்கு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட காரணத்தினால், மீண்டும் 2019 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதத்தில், தண்டந்தோட்டம் பகுதியை சேர்ந்த கே வாசு என்பவர், பார்வதி சிலை காணாமல் போனது தொடர்பாக புகார் ஒன்றை அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதன் படி, பார்வதி சிலை காணாமல் போனது பற்றி விசாரிக்க, களமிறங்கிய சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

பின்னரும் இந்த வழக்கு, நகர்வு இல்லாமல் இருந்ததாக கூறப்படும் நிலையில், சமீபத்தில் மீண்டும் தீவிர விசாரணை துவங்கி உள்ளது. இன்ஸ்பெக்டர் எம். சித்ரா தலைமையில், பார்வதி சிலை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், வெளிநாடுகளில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்கள் மற்றும் ஏல மையங்களில், சோழர் காலத்து பார்வதி சிலைகளை பற்றி தேட ஆரம்பித்துள்ளனர்.

அப்போது, தண்டந்தோட்டம் பகுதியில் உள்ள ஆலயத்தில் இருந்து பார்வதி சிலை காணாமல் போனது பற்றி தகவல் ஒன்று போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் படி, வெளிநாடுகளில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்கள் மற்றும் ஏல மையங்களில் கைமாறியதும் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, காணாமல் போன பார்வதி தேவி சிலை, அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் உள்ள  போன்ஹாம்ஸ் ஏல இல்லத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக சிலைக்கடத்தல் பிரிவு சிறப்பு சிஐடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, இந்த சிலையை தற்போது மீட்கும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அதற்கான ஆவண முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த சிலையின் மதிப்பு, 212,575 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 1.6 கோடி ரூபாய்) ஆகும்.

12 ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தை சேர்ந்த இந்த பார்வதி தேவி சிலை, செப்பு-அலாய் கலந்து  வடிவமைக்கப்பட்டதாகும். மேலும் கரண்ட முகுடா என்றழைக்கப்படும் கிரீடத்தை பார்வதி சிலையில் வடிவமைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

STATUE, TEMPLE, KUMBAKONAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்