'அருள் வாக்கு வாங்குங்க... அரசு வேலைக்கு போங்க!'... பக்தர்கள் தலையில் ஏறி... அருள் சொல்லும் இந்த கார்மேகச் சித்தர் யார்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சித்தர் என்ற பெயரில் அருள்வாக்கு கூறுவதாக மக்களிடம் பிரலபமாகி வருகிறார் புது கருப்புசாமி கார்மேக சித்தர்.

பிரபு என்ற இயற்பெயர் கொண்ட இளைஞர், சாதாரண டிராக்டர் மெக்கானிக்காக இருந்து வந்தவர். தற்போது அவர், பொதுமக்கள் தேடி வரும் கார்மேகச் சித்தராக அவதாரம் எடுத்துள்ளார்.

மகாராஜா வருகிறார், பராக் பராக் எனக் கூறுவதுபோல துதிபாடி அழைத்ததும் வேகமாக வருகிறார், கார்மேகச் சித்தர். இளைஞர் ஒருவரின் தலையில் வைக்கப்பட்ட பலகையில் ஏறி நின்றதும் அவரைக் காண வருகின்றனர் பக்தர்கள். அப்போது, அவர்களுக்கு ஆவேசத்துடன் அருள் வாக்கு கூறுகிறார் சாமியார் கார்மேகச் சித்தர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் தான் இப்படியொரு விநோத சம்பவம் நடந்து வருகிறது. 2017ம் ஆண்டு தனது அருள் வாக்கு மையத்தை தொடங்கிய பிரபு, ஒருவரின் தலைமீது அமர்ந்து அருள்வாக்கு சொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். குறி கேட்டு வருபவர்களிடம் அரசு வேலை வாங்கித் தருகிறேன், லாட்டரியில் பணம் விழ வைக்கிறேன் எனக் கூறி ஆயிரக் கணக்கில் கார்மேகச் சித்தர் பணம் வாங்குவதாகவும் சொல்லப்படுகிறது. அரசு வேலை வாங்கித் தந்தால் இவ்வளவு கமிஷன் தர வேண்டும் எனவும் பக்தர்களிடம் பேரம் பேசுகிறார்.

கார்மேகச் சித்தரிடம் அருள் வாக்கு கேட்க வந்த பக்தர் ஒருவர் அவர் கேட்டதால் தனது சொகுசு காரையே கொடுத்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. குடிசை வீட்டில் தொடங்கிய அருள் வாக்கு மையம் தற்போது பெரிய கட்டிடமாக உருமாறிய நிலையில், தனக்கு சொந்தமாக பிரம்மாண்டமான வீடு ஒன்றையும் கட்டி வருகிறார்.

போச்சம்பள்ளியில் சாமியார் கருப்பசாமி சித்தரை தேடி படையெடுக்கும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அரசு வேலை வாங்கித் தருகிறேன் எனவும், தடை செய்யப்பட்ட லாட்டரியில் பணம் விழ வைக்கிறேன் என்றும் சாமியார் ஒருவர் அரங்கேற்றி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

GODMAN, JOB, LOTTERY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்