பறிபோன 'ஐடி' கம்பெனி வேலை... கணவருடன் சேர்ந்து இரவுகளில் திருடிய 'கர்ப்பிணி' பெண் ... சிக்கிய 'சிசிடிவி' காட்சிகளால் அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கணவருக்கு ஐடியா கொடுத்து அவருடன் சேர்ந்து இரவு நேரங்களில் காவேரியும் சென்றிருக்கிறார்.
சென்னை எண்ணூர் பகுதியில் அடிக்கடி வெள்ளாடுகள் காணாமல் போவதாக அப்பகுதியை சேர்ந்த சக்ரபாணி என்பவர் புகார் ஒன்றை போலீஸ் ஸ்டேஷனில் அளித்தார். அதோடு திருடிய கணவன், மனைவியையும் கையோடு பிடித்து போலீசில் ஒப்படைத்து இருக்கிறார். அவர்கள் இருவரையும் போலீசார் விசாரித்ததில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திக் (27) உணவு டெலிவரி பாய். எண்ணூரை சேர்ந்தவர் காவேரி(25) ஐடி கம்பெனி ஒன்றில் பணிபுரிந்துள்ளார். வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்த இருவருக்கும் ஊரடங்கில் வேலை பறிபோனது. காவேரி கர்ப்பிணியாக இருந்தும், இருவரது வீட்டிலும் உதவி கிடைக்கவில்லை. இதனால் என்ன செய்வது என்று யோசித்த காவேரி எண்ணூர் பகுதியில் வெள்ளாடுகள் சுற்றி திரியும் அவற்றை இரவில் சென்று திருடலாம் என ஐடியா கொடுத்து இருக்கிறார்.
இதையடுத்து கார்த்திக், மனைவியை அழைத்துக் கொண்டு எண்ணூருக்குச் சென்றார். அங்கு தெருவில் ஆடுகள் சுற்றித்திரிந்தன. அவற்றை திருடி கார்த்திக்கும் காவேரியும் குறைந்த விலைக்கு ஆட்டை விற்றனர். அதனால் இருவருக்கும் பணம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து எண்ணூர் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் இருவரும் ஆடுகளைத் திருடிவந்தனர். போலீசார், பொதுமக்கள் சந்தேகம் கொள்ளாமல் இருக்க கர்ப்பிணி மனைவி காவேரியையும் கார்த்திக் உடன் அழைத்து சென்றுள்ளார்.
இதுவரை 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை கார்த்திக், காவேரி இருவரும் திருடி தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர், திருவல்லிக்கேணி பகுதிகளில் உள்ள இறைச்சிக்கடைகளில் விற்று வந்துள்ளனர். ஆடு திருடிய குற்றத்துக்காக கார்த்திக், காவேரியைக் கைது செய்து போலீசார் தற்போது சிறையில் அடைத்துள்ளனர். இதுதொடர்பாக சிசிடிவி காட்சி ஒன்றையும் போலீசார் கைப்பற்றி இருக்கின்றனர்.
அதில் ஹெல்மெட் அணிந்திருக்கும் கார்த்திக், தெருவில் படுத்து இருக்கும் ஆடு ஒன்றை தூக்கிக் கொண்டு வந்து பைக்கின் முன் பகுதியில் வைக்கிறார். பின்னர் இன்னொரு ஆட்டை அவர் தூக்கிக்கொண்டு வருகிறார். அதுவரை பைக்கிலிருக்கும் ஆட்டை காவேரி பிடித்துக் கொண்டிருக்கிறார். இரண்டு ஆடுகளை ஒரே நேரத்தில் திருடிக்கொண்டு பைக்கை கார்த்திக் ஸ்டார்ட் செய்வதற்குள் ஒரு ஆடு பைக்கிலிருந்து குதித்து தப்பி ஓடுவதோடு சிசிடிவி முடிவடைகிறது. இந்த சம்பவம் தற்போது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- திடீரென அதிகரித்த எண்ணிக்கையால் 'கலங்கித்தவித்த' மக்கள்... 40 நாட்களுக்கு பின் 'மீண்டு' வந்த தமிழக மாவட்டம்!
- கொரோனா பாதிப்பு: முதலிடத்தில் இருந்த கோடம்பாக்கத்தை... 'முந்திய' புறநகர் மண்டலம்!
- 'யாரும் கைலயும் காசு இல்ல!.. தங்கம் விலை மட்டும் எப்படி தாறுமாறா ஏறுது'!?.. இன்றைய விலை என்ன தெரியுமா?
- விருதுநகரில் மளமளவென அதிகரிக்கும் கொரோனா தொற்று!.. தேனியில் 6 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- 'ஐடி கம்பெனிகளில் உருவாகும் மிகப்பெரிய மாற்றங்கள்...' - வொர்க் ஃப்ரம் ஹோம் பற்றி ஊழியர்களின் கருத்துக்கணிப்பு...!
- தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்... சளைக்காமல் கோரத்தாண்டவம் ஆடும் வைரஸ்!.. முழு விவரம் உள்ளே
- கொரோனாவின் 'முக்கிய' அறிகுறி: சளி, இருமலை குணப்படுத்தும் 'வெற்றிலை' துளசி சூப்... தயாரிப்பது எப்படி?
- இந்தியாவுல கொரோனா தடுப்பூசி 'மொதல்ல' யாருக்கு கிடைக்கும்?
- “சுஷாந்த் கேஸை நான் விசாரிக்கிறேன்!”.. ‘அசுர வேகத்தில் வந்த ஐபிஎஸ் அதிகாரி!’.. மாநகராட்சி செய்த காரியம்!
- ‘ஒரே நாளில் 109 பேர்.. இதுவரை இல்லாத அளவில் கொரோனா உயிரிழப்பு!!’..இன்றைய நிலவரம்! முழு விபரம் உள்ளே!