"ஆன்லைன் வகுப்புல ஆபாசப்படம்தான் ஓடுது.. அதனால மொதல்ல இத பண்ணுங்க!"...உயர்நீதிமன்றத்தை 'அதிரவைத்த' புதிய 'மனு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் திறப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருதது.

Advertising
Advertising

இதனால் சில பள்ளிகள் நடப்பு கல்வி ஆண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் நடத்தப்படுகின்றன. ஆனால் இதுபோன்ற வகுப்புகளில் கலந்துகொள்ளும் மாணவ மாணவிகளின் கவனம் ஆபாச இணையதளங்களால் சிதைவதால், அவர்களால் அதுபோன்ற இணையதளங்களை பார்க்க முடியாதபடி விதிகளை வகுக்க வேண்டும் என்றும் அதுவரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை,சென்னை புத்தகரம் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தைப் பொருத்தவரை, 8% வீடுகளில் இணையதள இணைப்புடன் கம்ப்யூட்டர்கள் உள்ளதாகவும், டிஜிட்டல் முறையில் பாடம் நடத்துவதால் நகரத்தில், கிராமத்தில் இருக்கும் மாணவர்களுக்கு இடையில் பொருளாதார ரீதியான சமநிலை இல்லாததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முறையான டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மாணவர்களும், ஆசிரியர்களும் இடையூறுகளை சந்தித்து வருவதாகவும் அந்த மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இதனால் மாணவ, மாணவியர் ஆபாச இணையதளங்களை பார்ப்பதை தடுக்கும் வகையில், முறையான விதிகளை  சட்ட விதிகளின்படி,  வகுக்காமல் ஆன் லைன் வகுப்புக்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் அந்த மனுவில் சரண்யா கோரியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்