"உங்களை நேர்ல சந்திச்சு நன்றி சொல்லணும்".. முதல்வருக்கு கடிதம் எழுதிய 3 ஆம் வகுப்பு மாணவி.. நெகிழ்ச்சி பின்னணி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க விருப்பப்படுவதாக 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | 145 வருஷ டெஸ்ட் வரலாற்றுல இப்படி ஒரு சம்பவம் நடந்தது இல்ல.. பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டியில் நடந்த சுவாரஸ்யம்..!

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள வினை தீர்த்த நாடார்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருபவர் ஆராதனா. இவர் தமிழக முதல்வர் முக. ஸ்டாலினுக்கு சமீபத்தில் கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில் தான் படித்து வரும் பள்ளியில் போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லை எனவும் விளையாட்டு மைதானங்கள் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், இதன் காரணமாக தனது பெற்றோர் வேறு ஊரில் உள்ள தனியார் பள்ளியில் தன்னை சேர்க்க இருப்பதாகவும் ஆனால் தனக்கு இந்த ஊரிலேயே படிக்க விருப்பம் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் பேசுகையில்,"வினை தீர்த்த நாடார்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் ஆராதனா என்னும் சிறுமி சமீபத்தில் எனக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லை என குறிப்பிட்டு வகுப்பறைகளை உருவாக்கித் தர கோரிக்கை வைத்திருந்தார்.

அந்த கடிதத்தை பார்த்ததும் எனக்கு பெருமையாக இருந்தது. என் மீது அவர் எவ்வளவு நம்பிக்கையை வைத்திருந்தால் எனக்கு இப்படி ஒரு கடிதத்தை அவர் எழுதி இருப்பார்? அந்தக் குழந்தை ஆராதனாவின் கோரிக்கை ஏற்கப்பட்டது என்பதை இந்த மேடையிலேயே அறிவிக்கிறேன். முதற்கட்டமாக 35 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் இரண்டு பள்ளி கட்டிடம் கட்டித் தரப்படும். மேலும் சிறுமி ஆராதனா அதே பள்ளியில் படித்து எதிர்காலத்தில் நல்ல நிலையை அடையவும் நான் வாழ்த்துகிறேன்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சிறுமி ஆராதனா நன்றி தெரிவித்து முதல்வருக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில்,"நான் அனுப்புன மனு கடிதத்தை ஏற்று எனது பள்ளிக்கு நிதி ஒதுக்கிய முதலமைச்சர் ஐயாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதே பள்ளியில் படித்து பெரிய ஆளாகனும்னு சொன்னீங்க ஐயா. நிச்சயம் அதே மாதிரி நான் ஆவேன் ஐயா. அப்போதும் நீங்கள் தான் முதலமைச்சராக இருக்கனும் ஐயா. உங்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க ஆசையாக இருக்கிறது" என அந்த சிறுமி குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில் இந்த கடிதம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | உயிருக்கு போராடும் மீம்ஸ் நாயகன் சீம்ஸ்.. உரிமையாளரின் உருக்கமான பதிவு.. கலங்கிப்போன நெட்டிசன்கள்..!

MKSTALIN, GIRL, THANKING LETTER, CM STALIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்