‘ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்த இளைஞர்’.. ‘திருமணமான 7வது நாளில்’.. ‘இளம் பெண்ணுக்கு நடந்த சோகம்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் திருமணமான 7வது நாளில் இளம் பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திரிசூலம் பகுதியைச் சேர்ந்த அன்பின்ராஜ் என்பவர் டிரைவராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மனிஷா (21) எனும் இன்ஜினியரிங் மாணவியைக் காதலித்து வந்துள்ளார். அதேசமயம் அன்பின்ராஜ் அனிதா எனும் மற்றொரு பெண்ணையும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்பின்ராஜுக்கும், மனிஷாவுக்கும் பெசன்ட் நகரில் திருமணம் நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து திருமணமான 7வது நாளில் மனிஷா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மனிஷாவின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மனிஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக அன்பின்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள போலீஸார், “பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மனிஷா கொலை செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை. ஆர்.டி.ஓ. விசாரணை முடிந்து அறிக்கை சமர்பித்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளனர். ஆனால் தூக்கில் தொங்கிய மனிஷாவின் காலிலும், கழுத்திலும் காயங்கள் இருப்பதால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘எல்கேஜி படிக்கும் மகனுக்கு’... ‘புராஜெக்ட் செய்ய உதவியபோது... 'ஆசிரியருக்கு நேர்ந்த கொடூரம்'
- ‘இதெல்லாம் வேண்டாமென எவ்வளவு கண்டித்தும்’.. ‘தாய் கேட்காததால்’.. ‘ஆத்திரத்தில் மகன் செய்த நடுங்க வைக்கும் காரியம்’..
- ‘அடுத்த பாஜக தலைவர் ரஜினியா?’... ‘நண்பர் திருநாவுக்கரசர் பேட்டி’!
- ‘கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கிறேன்’... ‘ஆசைக் காட்டிய இளைஞரின் செயலால்’... '15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்'!
- ‘வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை’.. ‘அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்’..
- 'பட்டுச்சேலை கட்டிட்டு வரேன்னு போன பொண்ணு'...'தவித்து நின்ற மணமகன்'...கடைசி நேரத்தில் நடந்த சோகம்!
- ‘சாதி மாறி காதலித்த இளம் பெண்ணுக்கு நடந்த பயங்கரம்’.. ‘அரை நிர்வாணமாக்கி’.. ‘உறவினர்கள் ஒன்றுகூடி செய்த கொடூரம்’..
- ‘மெட்ரோ ரயிலில் இதெல்லாம் பண்ணாதீங்க’... ‘ரயில் நிர்வாகம் எச்சரிக்கை’!
- 3 மாசத்துல 10,000 பேர் பஸ்ல இப்டி பண்ணிருக்காங்களா..? அதிர வைத்த சென்னை போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்..!
- ‘திடீரென உருவான பெரிய பள்ளம்’... ‘அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள்’... 'சென்னையில் பரபரப்பு'!