லாரியில் சிக்கி.. தரதரவென இழுத்துச் சென்ற பரிதாபம்.. டூ வீலர் ஓட்டிய 13 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரையில் 13 வயது சிறுமியிடம் இருசக்கர வாகனத்தை ஓட்ட அனுமதித்த நிலையில், சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளாகி அவ்விடத்திலேயே பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் வலையங்குளம் பகுதியில் பெயிண்ட் கடை வைத்திருக்கும் பெருமாள் என்பவரின் 13 வயது மகள் திவ்யா பெருங்குடியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் நிலையில், தனது தந்தையின் கடைவரை சென்று வருவதற்காக டிவிஎஸ் XL இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு சென்றிருக்கிறார்.

அப்போது பெருங்குடி - திருமங்கலம் பைபாஸில் போய்க்கொண்டிருந்தபோதும், பின்னால் வந்த சரக்கு லாரி சிறுமியின் இருசக்கர வாகனத்தில் மோதி 100 மீட்டர் வரையில் தரையில் இழுத்துச் சென்றுள்ளது. இதனால் பரிதாபமாக சிறுமி அங்கேயே உயிரிழந்தார். ஓட்டுநர் உரிமம் இல்லாத சிறுவர், சிறுமியிடம் வாகனங்களைக் கொடுப்பதால் இத்தகைய இழப்பு ஏற்படுவதாகவும் பலர் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஆனால் டிரைவரோ தப்பியோடிவிட்ட நிலையில், அவரை கைது செய்ய வேண்டும் என்றும், அடிக்கடி விபத்து ஏற்படுவதால் இப்பகுதியில் பாலம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்றும் சிறுமியின் உறவினர் மணிக்கணக்கில் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

ACCIDENT, LORRY, MINOR GIRL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்