'இதுனால தான் கடவுளை உங்க ரூபத்தில் பாக்குறோம்'... 'அதிகரித்த கர்ப்பிணிகளின் எண்ணிக்கை'... கொஞ்சம் கூட யோசிக்காமல் அரசு மருத்துவர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவை அரசு மருத்துவர்களின் செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் கர்ப்பிணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. தொற்றுப் பரவல் அதிகமாகிவரும் அதேவேளையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதில், பிரசவத்தின்போது சிக்கல் ஏற்படும் என்று கருதி தனியார் மருத்துவமனைகளிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட கர்ப்பிணிகளும் அடங்குவர். கடந்த மார்ச் மாதத்தில் 1,277 கர்ப்பிணிகளும், ஏப்ரலில் 890 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த இரண்டு மாதங்களில் மட்டும் கோவை அரசு மருத்துவமனையில் 1,230 பிரசவங்கள் நிகழ்ந்துள்ளன.

இந்த சூழ்நிலையில் கொரோனா பரிசோதனை முடிவுக்குக் காத்திராமல் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 27 கர்ப்பிணிகளுக்குக் கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர்.  கடந்த இரண்டு மாதங்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட 1,046 கர்ப்பிணிகளை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். மார்ச் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9 கர்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த எண்ணிக்கை ஏப்ரலில் 64 ஆக அதிகரித்தது. இதில், 40 கர்ப்பிணிகளுக்குப் பிரசவம் நிகழ்ந்துள்ளது. கரோனா பரிசோதனை (ஆர்டி-பிசிஆர்) முடிவு வெளியாகக் குறைந்தபட்சம் 4 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டும். ஆனால், அவசர சிகிச்சை தேவைப்படும்போது அவ்வாறு முடிவுக்காகக் காத்திருந்தால் தாய், குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே முழுக் கவச உடை (பிபிஇ கிட்) உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். அதில், 27 கர்ப்பிணிகளுக்குக் குழந்தை பிறந்த பிறகே கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. கொரோனா காலத்தில் மருத்துவமனையின் மகளிர், மகப்பேறு மருத்துவத் துறைத் தலைவர் மருத்துவர் மனோன்மணி, இதர துறை மருத்துவர்களின் பணி என்பது இன்றியமையாதது என மருத்துவமனையின் டீன் மருத்துவர் நிர்மலா கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்