'யார் இந்த ஜேக்கப்'?...'சென்னையில் படிப்பு'...'இந்தியாவ விட்டு கிளம்புங்க'...அதிரடி நடவடிக்கை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஜெர்மன் மாணவரை இந்திய குடியுரிமை துறை திருப்பி அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐ.ஐ.டியில் முதுகலை இயற்பியல் பிரிவில் பயின்று வந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜேக்கப் லிண்டந்தால் என்ற மாணவர் கடந்த வியாழனன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் ஜெர்மனியை ஹிட்லர் ஆளத்துவங்கிய 1933 மற்றும் 1945-ம் ஆண்டில் 2-ம் உலகப்போரில் ஹிட்லர் தோல்வியுற்றதைக் குறிக்கின்ற வகையில் ஆங்கிலத்தில் ’WE HAVE BEEN THERE’ 1933-1945 என்று எழுதப்பட்ட பதாகையை தன்னுடைய கையில் ஏந்தி போராட்டத்தில் பங்கெடுத்துள்ளார்.

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை அன்றைய ஹிட்லர் தலைமையிலான ஆட்சியோடு ஒப்பிட்டு மறைமுகமாக அவர் விமர்சித்துள்ளார் என அந்த மாணவருக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவர் இந்தியாவில் தங்கி பயில்வதற்கான அனுமதியை இந்திய குடியுரிமைத் துறை ரத்து செய்தது. இதனையடுத்து ஜேக்கப் லிண்டென்ந்தால் சென்னை ஐ.ஐ.டியில் இருந்து வெளியேற்றப்பட்டு ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

ஜெர்மனி மற்றும் சென்னை ஐஐடி க்கு இடையிலான மாணவர்கள் பரிமாற்ற ஒப்பந்த அடிப்படையில் சென்னை ஐஐடியில்  மாணவர் ஜேக்கப் முதுகலை இயற்பியல் பயின்று வந்தது குறிப்பிடத்தக்கது. ஓராண்டு கால படிப்பில் இன்னும் 6 மாத காலபடிப்பு மீதமிருக்கும் நிலையில் மாணவர் ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்

NARENDRAMODI, BJP, CHENNAI IIT, CAA PROTESTS, GERMAN STUDENT, NAZI, JAKOB LINDENTHAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்