“நீங்க ஏன் இவங்களுக்கு லெட்டர் எழுதி அவங்க தோத்துட்டாங்கனு சுட்டிக்காட்டக் கூடாது? இது ஒரு ட்ரெண்ட் ஆயிடுச்சு!”.. கமலை காட்டமாக விமர்சித்த காயத்ரி ரகுராம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனாவுக்கு எதிரான போரில் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் இருப்பதை காண்பிக்கும் விதமாக விளக்கேற்ற சொன்ன பிரதமர் மோடியை விமர்சித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஒரு விமர்சன கடிதம் எழுதியிருந்தார்.

அதில் “பொறுப்புள்ள அதே சமயம் ஏமார்ந்த குடிமகனாக இந்த கடிதத்தை எழுதுகிறேன். பணமதிப்பிழப்பு ஸ்டலில் இந்த ஊரடங்கை அமல்படுத்தினீர்கள். நான் இரண்டு சூழல்களிலும் உங்களை நம்பினேன். ஆனால் நான் நினைத்தது தவறு என காலம் எனக்கு சுட்டிக் காட்டியது. எண்ணெய் இல்லை; விளக்கேற்ற முடியுமா?. உங்கள் தொலைநோக்கு பார்வை தோற்றுவிட்டது. கடந்த இரண்டு முறை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய நீங்கள் இந்த கடினமான சூழலில் பிரச்சனைகளை சந்திக்கும் மக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினீர்கள். தலைமேல் கூரையே இல்லாதோரின் நிலை என்னவாவது? நம் சமூகத்தில் அதிகமாக இருக்கும் ஏழை மக்களை புறக்கணித்துவிட்டு பால்கனி மக்களுக்காக இயங்கும் பால்கனி அரசாக நீங்கள் உள்ளீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த கடிதத்தை விமர்சித்து பா.ஜ.க-வை சேர்ந்த நடன நடிகை காயத்ரி ரகுராம் டுவிட்டரில், “சீன அதிபர் ஜின்பிங்குக்கும், தப்லிக் இ ஜமாத்துக்கும்  நீங்கள் ஏன் கடிதம் எழுதி அவர்களின் தோல்வியை சுட்டிக்காட்டக்கூடாது? அரசின் உத்தரவை மதிக்காமலும்  கீழ்படியாமலும், பொறுப்பற் குடிமக்களுக்கு கடிதம் எழுதுங்கள். அப்படியானால் தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தோல்வியடைந்தார்கள் என கூறுகிறீர்களா? தமிழக எம்.எல்.ஏ., எம்.பி.,க்களுக்கு முதலில் கடிதம் எழுதி அவர்களிடம் முறையிடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவது என்பது இப்போது ஒரு டிரெண்ட் ஆகி விட்டதாகவும் நேற்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் ஒற்றுமையை காட்டினார்கள் எனும்போது அதில் பங்கேற்கவில்லை என்பது உங்களுக்கு உறுத்தவில்லையா? என்றும் கொரோனாவுக்கு எதிராக கடுமையாக உழைத்துவரும் மத்திய மாநில அரசுகள் பற்றி. மேம்போக்காக எழுதாமல், உரிய தகவல்களோடு எழுதுங்கள் என்றும்

அவர் கமலை நோக்கி கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்