‘சென்னையை ஒட்டிய இந்தப் பகுதிகளிலும்’... ‘நான்கு நாட்கள் முழு ஊரடங்கு’... வெளியான அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையை ஒட்டிய செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட பலப் பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை, கோவை, மதுரையில் 26-ம் தேதி காலை முதல் 29-ம் தேதி இரவு வரையும், சேலம், திருப்பூரில் 26-ம் தேதி காலை முதல் 28-ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் கடுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் என்றும் முதலமைச்சர் கூறியிருந்தார்.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தாம்பரம், பல்லாவரம் நகராட்சிகளிலும், ஏப்ரல் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 29-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம், பீர்க்கங்கரணை, பெருங்களத்தூர் பகுதிகளிலும், சிட்லப்பாக்கம், திருநீர்மலை மற்றும் மாடம்பாக்கம் பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அகரம்தென், மதுரப்பாக்கம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், வேங்கைவாசல், மூவரசம்பட்டு பகுதிகளிலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, பூந்தமல்லி, மீஞ்சூர், பொன்னேரில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் சோழவரம் ஒன்றியத்தில் 9 கிராம பஞ்சாயத்துகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வில்லிவாக்கம் ஒன்றியத்தில் 13 கிராம பஞ்சாயத்துகளிலும், புழல் ஒன்றியத்தில் 7 கிராம பஞ்சாயத்துகளிலும், பூந்தமல்லி ஒன்றியத்தில் 28 கிராம பஞ்சாயத்துகளிலும், மீஞ்சூர் ஒன்றியத்தில் 9 கிராம பஞ்சாயத்துகளிலும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'லாக்டவுனை மீறி கிரிக்கெட்'.. 'விரட்டிய' ட்ரோனை நோக்கி 'இளைஞர்' செய்த 'வைரல்' காரியம்!'.. வீடியோ!
- மற்றொரு 'வுகானாக' மாறிய 'சீன நகரம்'... 'மொத்தமாக முடக்கியது சீனா...' '28 நாள்' தீவிர கண்காணிப்பில் 'ஒரு கோடி பேர்...'
- 'தலைநகரை உலுக்கிய கொடூரம்'... 'பக்காவா பிளான் போட்ட பெண்'... 'துணை நின்ற கணவர்'... அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த கோரம்!
- 'அணியில் நிராகரிக்கப்பட்டபோது...' ''மனம் உடைந்து இரவு முழுவதும் கதறி அழுதேன்...'' 'மனம் திறந்த' ஸ்டார் 'கிரிக்கெட் வீரர்...'
- ‘கட்டுக்கடங்காமல் குவிந்த மக்கள் கூட்டம்’.. மூடப்பட்ட மதுரை கலெக்டர் அலுவலக நுழைவு வாசல்.. காரணம் என்ன?
- VIDEO: புதருக்குள் இருந்த ‘காதல்ஜோடி’.. பறந்து வந்த போலீஸ் ‘ட்ரோன்’.. ‘ஐய்யோ ஓடு..ஓடு..’ வைரல் வீடியோ..!
- ‘நாங்களும் மனுஷங்கதான்’.. ‘எங்களுக்கும் பசி எடுக்கும்’.. சகோதரியா நினைச்சு ‘உதவி’ பண்ணுங்க.. திருநங்கைகள் வேதனை..!
- "இதுக்கு மேல தாக்குப்பிடிக்க முடியாது..." "உடனே கடைய திறங்க...!" 'கதறுவது குடிமகன்கள் அல்ல...'
- "ஒளிஞ்சிருக்குற லட்சணம் அப்படி!".. 'ட்ரோனை' பறக்கவிட்டு 'உள்ளூர்' ஆட்டக்காரர்களை 'தெறிக்க விட்ட' நம்மூர் 'போலீஸார்'.. வீடியோ!
- 'போலீஸ் எனக் கூறி...' 'ஃபூலிஸ் ஆக்கிய லாக்டவுன் ராபர்ஸ்...' ''லிஃப்ட் கேட்டா உஷார் மக்களே...''