“இதான் அந்த சர்ப்ரைஸா?”... “இப்படி ஒரு கிஃப்டை யார்னாலயும் கொடுக்க முடியாது!”.. “வேறலெவல்” வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணத்தின்போது வாழ்நாளில் மறக்க முடியாத கிஃப்ட் கொடுக்க வேண்டும் என்பதில் நண்பர்கள் கவனமாக இருப்பதை பார்க்க முடியும். அப்படி தங்களது நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு வந்த நண்பர்கள் திருமண மேடையில் வந்து பரிசு கொடுக்கும் பெயரில் சின்ன சின்ன குட்டி கலாட்டாக்களை செய்து சர்ப்ரைஸ் கொடுத்தும் பலர் அசத்துவார்கள்.
இப்படி நண்பர்கள் சிலர், தங்களுடைய நண்பர் ஒருவருக்கு வாழ்க்கையில் மறக்கவே மறக்க முடியாத, யாரும் யோசித்து கூட பார்க்க முடியாத ஒன்றை கிஃப்டாக கொடுக்க, மிக ஆவலுடன் வந்திருக்கின்றனர். அவர்கள் கொடுத்த கிஃப்டை மணமக்களும் மிகவும் ஆர்வத்துடன் பிரித்துப் பார்க்கின்றனர்.
பார்ப்பதற்கு சிறிய சைஸ் பேனர் போல் தெரிகிறது.
அதை முழுதாக விரித்தால்தான் தெரிகிறது, அது இங்கிலீஷ்காரன் படத்தில் நடிகர் வடிவேலு தனது கால்சட்டை பாக்கெட்டில் கையைவிட்டு ‘ஒன்றுமில்லை’ என்று எடுத்துக் காட்டும் படம். இந்த கிஃப்டைத்தான், இந்த நண்பர்கள் தங்களுடைய நண்பருக்கு மணமேடையில் வைத்து பரிசாக அளித்துள்ளனர்.
இதற்கு அர்த்தம் என்னவென்பது இந்நேரம் புரிந்திருக்கும். ஆம், ‘மன்னித்துவிடு நண்பா.. எங்களிடம் உனக்கு கொடுப்பதற்கு கிஃப்ட் ஒன்றும் இல்லை. இந்த அன்பைத் தவிர’ என்பதைத்தான் இந்த நண்பர்கள் இவ்வளவு வித்தியாசமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வேற லெவலில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
“3வது பெண் குழந்தை.. பயத்துல”.. “கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!”.. “நடுங்க வைக்கும் சம்பவம்!”
தொடர்புடைய செய்திகள்
- “ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கதி”.. வீடியோவாக பரவும் “திக் திக் நிமிடங்கள்”.. செண்ட்ரல் ரயில்வே பதில்!
- 'மச்சான் நமக்குள்ள என்னடா '...'500 ரூபாயை' திருப்பி கேட்ட உயிர் நண்பன்'... அடுத்து நடந்த பயங்கரம்!
- ‘உற்சாக’ மிகுதியில் ‘மருத்துவ’ மாணவர் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்... ‘அடுத்த’ நொடி நடந்த ‘விபரீதம்’... ‘உறைந்துபோய்’ நின்ற ‘நண்பர்கள்’...
- “ஒனக்கு என் புருஷன் கேக்குதா?”.. “முடியைப் பிடித்து இழுத்து”.. “புரட்டி எடுக்கும் சிங்கப்பெண்!”.. வீடியோ!
- “அசுர வேகத்தில் வந்த கார்.. அடுத்தடுத்து நடந்த களேபரம்!”.. பதற வைக்கும் வீடியோ!
- “15 செகண்ட்ஸ் டைம்.. என் குழந்தைக்கு முடியல”.. மெடிக்கலில் சம்பவம் செய்த “ஐ அம் சாரி” திருடன்!
- “டேக்-ஆஃப் ஆகும்போதே, சக்கரம் கழண்டு விழுது.. 2020க்கு ஓப்பனிங்!”.. “விமான பயணி எடுத்த வீடியோ!
- ‘சான்ஸே இல்ல’... ‘அதுவும் அந்த அம்மாவின் எக்ஸ்ப்ரஷன் வேறலெவல்!’.. ‘சர்ப்ரைஸால்’ நெகிழ்ந்த குடும்பம்.. வீடியோ!
- ‘எம்புட்டு நாள் ஆச்சு ஒன்னய பாத்து!’.. கழுத்தை நீட்டி Hug பண்ணிய ஒட்டகம்!.. நெகிழ வைக்கும் வீடியோ!
- 'கடைசியில நடந்த அந்த ட்விஸ்ட்'.. 'வேற லெவல் ட்ரிக்!'.. 'எப்படியெல்லாம் யோசிக்குறாங்கப்பா!'.. 'வீடியோ!'