எதே பொண்ண திருட போறாரா?.. கல்யாணத்துக்கு கட்-அவுட் வச்ச உயிர் நண்பர்கள்.. அந்த பின் குறிப்ப பார்த்துத்தான் எல்லோரும் சிரிச்சிட்டாங்க..😂
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராசிபுரம் அருகே இளைஞரின் திருமணத்திற்கு அவரது நண்பர்கள் வைத்திருந்த பேனர் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
Also Read | பெண் குழந்தை பிறந்தா 1 ரூபா கூட மருத்துவ கட்டணம் கிடையாதா.? இந்தியாவுல இப்படி ஒரு டாக்டரா..?
கல்யாணம் என்பதே பல்வேறு சடங்குகளை உள்ளடக்கியது. வரன் பார்ப்பது துவங்கி, அடுத்தடுத்து ஏகப்பட்ட வேலைகள் அணிவகுத்து நிற்கும். சமீப ஆண்டுகளில் திருமணத்தை ஒட்டி பல்வேறு புதிய புதிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியமானது பேனர்கள். கட்-அவுட் வைத்தால் தான் கல்யாண கலையே கட்டும் எனும் அளவுக்கு அவை பிரபலமாகிவிட்டன. சில சமயங்களில் மக்கள் தங்களுடைய வித்தியாசமான சிந்தனைகளை புகுத்தி அடிக்கும் பேனர்கள் சமூக வலை தளங்களில் வைரலாவதும் உண்டு.
அந்த வகையில் ராசிபுரம் அருகே, இளைஞர் ஒருவருடைய திருமணத்திற்கு அவருடைய நண்பர்கள் வைத்திருந்த பேனர் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள வடுகம் கிராமத்தில் தான் இந்த விநோத பேனர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கிராமத்தை சேர்ந்த சௌந்தர் என்பவருக்கும் காயத்ரி என்பவருக்கும் இன்று (நவம்பர் 7) திருமணம் நடைபெற்றிருக்கிறது. இதனை முன்னிட்டு மாப்பிள்ளையின் நண்பர்கள் ஊருக்குள் பேனர் ஒன்றை வைத்திருக்கின்றனர்.
அதில், வடுகத்தில் பரபரப்பு என தலைப்போடு துவங்கும் இந்த பேனரில் மணமக்களின் புகைப்படம் ஒருபக்கம் அமைந்திருக்கிறது. மற்றொரு பகுதியில், வாலிபர் கைது என்று குறிப்பிட்டுள்ளதோடு, அதற்கான காரணம் பெண்ணின் மனதை திருடியது என்றும், மூன்று முடிச்சு போடுவது ஆயுள் தண்டனை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மணமகளை கைது செய்பவர் என்றும், மணமகனை கைது செய்யப்படுபவர் என்றும் குறிப்பிட்டுள்ள குசும்பு பிடித்த நண்பர்கள் இறுதியில்,"06.11.22 இன்று இரவு பெண் திருடும் எங்களின் நண்பனின் முதல் திருட்டு வெற்றிபெற வாழ்த்துகிறோம்" எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
பேனரில் வடுகம் வேங்கை பிரதர்ஸ் நண்பர்கள் குழு என அச்சடிக்கப்பட்டு அதன் கீழே இந்த பேனருக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை எனவும் போட்டிருக்கிறார்கள் மாப்பிள்ளையின் நண்பர்கள். இந்நிலையில் இந்த பேனரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
Also Read | ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகும் கவிப்பேரரசு வைரமுத்துவின் பிரபல புத்தகம்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "எவ்ளோ நாள் ஏக்கம் தெரியுமா??".. பெண் தேடி போலீஸ் நிலையம் வரை கோரிக்கை வெச்ச இளைஞர்.. கடைசியில் சூப்பராக நடந்த திருமணம்
- சீக்கிரம் தாலியை கட்டு.. சாலையோர கோவிலில் அவசரமாக நடந்த காதல் திருமணம்.. பரபரப்பான மக்கள்..!
- இளைஞருக்கு நடக்க இருந்த கல்யாணம்... மண்டபத்தில் என்ட்ரி கொடுத்த கர்ப்பிணி பெண் .. விஷயம் தெரிஞ்சதும் வந்தவங்க எல்லாம் வெலவெலத்து போய்ட்டாங்க"
- ரெயில்வே டிக்கெட் மாதிரியே 'கல்யாண' அழைப்பிதழ்.. இதுல PNR நம்பர் இதுவா..? வேற லெவல்.
- 4வது திருமணம் ஆன 4 மாதத்தில் காணாமல் போன புதுப்பெண்.! விசாரணையில் காத்திருந்த ட்விஸ்ட்..!
- 5-வது திருமணத்தில் சிக்கிய பெண்.. கொத்தாக தூக்கிய 4 கணவர்கள்.. "ஆனா அதுக்கு அப்றம் ஒரு ட்விஸ்ட் நடந்தது பாருங்க"
- தன்னைவிட 6 வயசு மூத்த பெண்ணை கல்யாணம் செய்ய துடித்த வாலிபர்.. உண்மை தெரிந்து பெற்றோர் போட்ட திட்டம்.. திருப்பூரில் திக்..திக்..!
- 78 வயசு சிங்கிள் தாத்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம்பெண்.. வயசு வித்தியாசத்தை கேட்டு ஷாக்கான நெட்டிசன்கள்..!
- நள்ளிரவில் காதலி வீட்டுக்குள் நுழைந்த இளைஞர்.. சுற்றி வளைத்த பெண்ணின் குடும்பத்தினர்.. கடைசியில் கிராமத்தினர் எடுத்த முடிவு.. வைரல் வீடியோ..!
- "நீ வந்து கூட்டிட்டு போய்டு".. மனைவி அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்.. கல்யாணம் ஆகி ஒரே மாசத்துல கணவனுக்கு தெரியவந்த திடுக்கிடும் உண்மை..!