மேடையில் நண்பர்கள் கொடுத்த பரிசு.. தேம்பி அழ தொடங்கிய மாப்பிள்ளை.. "பாக்குற நமக்கே மனசு கலங்கி போய்டுச்சு"
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணம் என்றாலே மிக மிக சிறப்பான ஒரு நாளாக தான் அனைவராலும் பார்க்கப்படுகிறது. மணமக்கள் இருவரும் தங்கள் வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி எடுத்து வைக்கும் முதல் அடியாக இந்த நாள் பார்க்கப்படுகிறது.
அப்படி ஒரு சூழ்நிலையில், மணமகன் ஒருவருக்கு நண்பர்கள் கொடுத்த பரிசு தொடர்பான செய்தி, தற்போது இணையவாசிகள் பலரையும் மனம் உருக வைத்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில், திருமணத்தை சுற்றி நடக்கும் பல விஷயங்கள் இணையத்தில் அதிகம் வைரல் ஆவதை நாம் பார்த்திருப்போம்.
உதாரணத்திற்கு திருமணத்திற்காக எடுக்கப்படும் போட்டோஷூட், வித விதமாக அச்சடிக்கப்படும் புதுமையை கலந்த திருமண அழைப்பிதழ்கள், திருமண மேடையில் மணமக்களின் நடனம், நண்பர்கள் அளிக்கும் பரிசு என திருமணம் தொடர்பான ஏராளமான விஷயங்கள், இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு, நெட்டிசன்கள் மத்தியில் பேசு பொருளாகவும் மாறும்.
அந்த வகையில், தற்போது திருமண மேடையில், மாப்பிள்ளைக்கு அவரது நண்பர்கள் கொடுத்த பரிசு தான், பலரையும் மனம் உருக வைத்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கோட்டைமேடு பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிவழகன் மற்றும் மதி ஆகிய இருவருக்கு திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதன் பின்னர் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மணமக்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். அந்த சமயத்தில் தான், மாப்பிள்ளை உட்பட அனைவரையும் நெகிழ வைக்கக் கூடிய சம்பவம் ஒன்று அரங்கேறி இருந்தது. அறிவழகனின் தந்தை உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.
அப்படி இருக்கையில், நண்பரின் திருமணத்திற்கு உணர்ச்சிவசப்படக் கூடிய பரிசு ஒன்றை இளைஞர்கள் கொடுக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, அறிவழகனின் தந்தையின் உருவ படத்தை பேனர் வடிவில் சிறிய கட் அவுட் போல பிரிண்ட் செய்து பரிசாக அளித்தனர். இதனைக் கண்டதும் மேடையிலேயே கண்ணீர் விட தொடங்கிய அறிவழகன், பரிசளித்த நண்பரையும் கட்டித் தழுவிய படி அழுது கொண்டே இருந்தார்.
இதனைக் கண்டதும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் கலங்கி போனதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலாகி, பலரையும் நெகிழ வைத்து வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இனிமே யாரு என்ன உங்கள மாதிரி பாத்துப்பா?".. முதலாளி மரணத்தில் கண்ணீர் விட்டு கதறிய கன்று.. "பாக்குறவங்க மனசே ஒடஞ்சு போச்சுங்க"..
- காதலை மறக்க முடியாமல் புதுப்பெண் விபரீத முடிவு.. மனைவியின் முடிவை தாங்காத மாப்பிள்ளையும் அடுத்து எடுத்த சோகமுடிவு..!!
- மொழிதாண்டிய ஃபேஸ்புக் காதல்.. இரவோடு இரவாக கடலூருக்கு ரயிலில் வந்து காதலனை தேடிய பெண்.. கடைசியில் நடந்த கல்யாணம்.! ஹீரோவான காவல்துறையினர்.!
- "எவ்ளோ கூப்பிட்டும் கண் தொறக்கல".. பதற்றம் அடைந்த மனைவி.. திருமணத்தன்று இரவே புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம்!!
- திருநங்கையுடன் 'காதல்'!!.. ஓகே சொன்ன 'மனைவி'.. இரண்டாவது திருமணம் செய்த வாலிபர்!!.. வைரலாகும் ஃபோட்டோஸ்!!
- "ஹைய்யா ஜாலி ஜாலி.." தாலி கட்டுறப்போ மகிழ்ச்சியில் கைத்தட்டி குதித்த கல்யாண பெண்..!!!
- "அலெர்ட்டா இருக்காங்கப்பா..".. கல்யாண பொண்ணிடம் ‘வினோத கண்டிஷன்’ ... பாண்டு பாத்திரத்தில் கையெழுத்து வாங்கிய நண்பர்கள்.!
- ‘கழுத்துல தாலி ஏறப்போகுது.. என்னை கூட்டிட்டு போ’ - காதலி தட்டிவிட்ட மெசேஜ்.. சினிமா பாணியில் காதலன் கொடுத்த எண்ட்ரி.!
- "Love-க்கு இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல".. நாடுகளைக் கடந்த காதல்.. தென் கொரிய காதலியை கரம் பிடித்த தமிழக வாலிபர்!!
- மண்டபத்தில் வேறமாரி என்ட்ரி கொடுத்த பெண்.. "மாப்பிள்ளை எடுத்த ஓட்டம்".. அதிர்ந்து போன மணப்பெண்!!