‘கொசுவத்தியால் வந்த வினை’.. ‘வீட்டுக்குள் வெடித்து சிதறிய பிரிட்ஜ்’.. நள்ளிரவு நடந்த பயங்கரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவாரூர் அருகே பிரிட்ஜ் வெடித்து முதியவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மணவாளன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி (82). இவரது மனைவி நவநீதம். நேற்றிரவு வழக்கம்போல பக்கிரிசாமி வீட்டில் தூங்கியுள்ளார். அவர் படுத்திருந்த இடத்திற்கு அருகே பிரிட்ஜ் இருந்துள்ளது. எப்போதும் இரவு தூங்க செல்வதற்குமுன்பு பக்கிரிசாமி பிரிட்ஜ் மின் இணைப்பை துண்டிப்பது வழக்கம்.
அதனைப்போல் நேற்றிரவு பிரிட்ஜ் மின் இணைப்பை துண்டித்துவிட்டு, பிரிட்ஜின் மேல் கொசுவத்தியை ஏற்றி வைத்துவிட்டு தூங்கியுள்ளார். அப்போது பிரிட்ஜிக்கு மேல் இருந்த துணியில் கொசுவத்தி விழுந்து தீப்பிடித்துள்ளது. இதனையறியாத பக்கிரிசாமி நன்றாக தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். திடீரென துணி முழுவதும் தீ பற்றி பிரிட்ஜ் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.
இதில் பிரிட்ஜிக்கு அருகில் படுத்திருந்த பக்கிரிசாமி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பக்கிரிசாமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனை அனுப்பியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரிட்ஜ் வெடித்து முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '16 வயது' சிறுமியை 'கர்ப்பமாக்கிய' 3 பேர்... 'குளிர்பானத்தில்' மயக்கமருந்து கலந்து கொடுத்து... 4 மாதங்களாக... 'காதலித்தவனே' உடந்தையாக இருந்த 'கொடுமை'...
- ‘கேஸ் நிரப்பிய சிலிண்டர்களை ஏற்றி வந்தபோது’... ‘டிரான்ஸ்ஃபார்மர் மீது மோதிய லாரி’... 'பதற வைக்கும் விபத்து'!
- ‘26 பயணிகளுடன்’ சென்றுகொண்டிருந்த ‘தனியார்’ பேருந்து... சாலையில் ‘திடீரென’ தீப்பிடித்து ‘எரிந்த’ பயங்கரம்... ‘பரபரப்பு’ சம்பவம்...
- கொண்டாட்டத்தின்போது ‘புதுமாப்பிள்ளை’ செய்த ஸ்டண்ட்டால்... திருமணமான ‘இரண்டே’ மாதங்களில் நேர்ந்த ‘துயரம்’... போலீசுக்கு சொல்லாமல் ‘குடும்பத்தினர்’ செய்த காரியம்...
- VIDEO: 'கொரோனா கண்காணிப்பு முகாம்' இடிந்து விழுந்து... 26 பேர் பலி!... இதயத்தை ரணமாக்கும் சோகம்!
- ‘அதிவேகத்தில்’ வந்த பேருந்தால்... நேருக்கு நேர் ‘மோதி’ ஏற்பட்ட கோரம்... ‘3 குழந்தைகள்’ உட்பட ‘10 பேருக்கு’ நேர்ந்த ‘பரிதாபம்’...
- நாலு நாட்கள் 'பிணத்துடன்' சுற்றித்திரிந்த நபர்... கடைசியில் செய்த 'விபரீத' வேலை... பொறிவைத்து 'பிடித்த' போலீஸ்!
- 'நிலைகுலைந்த ஒட்டுமொத்த குடும்பம்'...'எமனாக வந்த கொடிக்கயிறு'... சென்னையை உலுக்கிய கோரம்!
- ‘அன்னைக்கு மட்டும் அவனுக்கு’... ‘சரியான நேரத்தில் கிடைச்சிருந்தா?’... ‘நண்பன் பலியான நாளில்’... ‘உயிர் கொடுக்கும் நண்பர்கள்’!
- 'ராசாத்தி போல இருந்தா என் புள்ள'... 'இப்படியா பாக்கணும்'... 'கதறிய அப்பா'... நெஞ்சை உருக்கும் கொடூரம்!