அக்காள் - தங்கை 3 பேருக்கும்.. ஒரே மேடை'ல நடந்த கல்யாணம்.. தமிழ்முறைப்படி திருமணம் செய்த French இளைஞர்கள்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் அக்காள் தங்கையான மூன்று தமிழ் பெண்கள், அதே நாட்டில் வசித்து வரும் இளைஞர்களை தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம், பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

Advertising
>
Advertising

தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்கள், மாசிலாமணி - ஆனந்தி தம்பதியினர். இவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்ஸ் நாட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

அங்கே தனியார் உணவகம் ஒன்றில் மேலாளராக மாசிலாமணி பணிபுரிந்து வருகிறார். மேலும், மாசிலாமணி - நந்தினி தம்பதியினருக்கு காயத்ரி, கீர்த்திகா மற்றும் நாராயணி என 3 மகள்களும் உள்ளனர்.

அவர்களின் மகள்களான மூவரும் பிரான்ஸ் நாட்டிலேயே படித்து அங்கேயே பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. அப்படி ஒரு சூழ்நிலையில், காயத்ரி, கீர்த்திகா மற்றும் நாராயணி என மூவரும் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் வாலிபர்களையே காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதில், ரெண்டு பேர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்ற ஒருவர் இந்தியராக இருக்கும் நிலையில், அவர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனைத் தொடர்ந்து, மகள்கள் மூவரின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத மாசிலாமணி மற்றும் அவரது மனைவி நந்தினி ஆகியோர், மகள்களின் திருமணத்தை அவர்களின் விருப்பம் போல நடத்தி வைக்கவும் முடிவு செய்துள்ளனர். அதன் படி, தனது உறவினர்களுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கும் மாசிலாமணியின் குடும்பத்தினர்கள் வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தங்களின் மூன்று மகள்களுக்கும் ஒரே நேரத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜார்ஜ், ராம்குமார், மஜ்ஜூ ஆகிய மூவருக்கும் திருச்செந்தூர் கோவிலில் வைத்து, தமிழ் கலாச்சாரப்படி மாலை மாற்றி திருமணமும் செய்து வைத்தனர். தொடர்ந்து, புதுமண ஜோடிகளை மாசிலாமணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வாழ்த்தவும் செய்தனர்.

திருமண கோலத்தில், காயத்ரி, கீர்த்திகா மற்றும் நாராயணி ஆகியோர், தங்களின் கணவர்களுடன் நிற்கும் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

FRANCE, NELLAI, MARRIAGE, LOVE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்