ஸ்மார்ட்ஃபோன் பெருகிவிட்டநிலையில், இண்டெர்நெட் வசதி இல்லாத கிராமங்களே தற்போது இல்லை எனலாம். என்னதான் பிரபல நிறுவனங்கள் ஆஃபர்கள் அள்ளிக் கொடுத்தாலும், இலவச வைஃபை என்பது மிகவும் கூடுதல் மகிழ்ச்சியான விஷயமே. அந்த வகையில், சேலம் மாநகராட்சியில் இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.
அரசு சார்ந்த இணையதள சேவைகளான வேலைவாய்ப்பு, மாநகராட்சி, மின்வாரியம், வருவாய்த்துறை, அரசு கேபிள் ஆகிய இணையதளங்களை மொபைலில் பார்த்துக்கொள்ளலாம். காலை 6 மணி முதல், இரவு 10 மணி வரை, இலவசமாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும், தடையின்றி பயன்படுத்தலாம். அதேநேரத்தில், பேஸ்புக், வாட்ஸ் ஆப், யூடியூப் போன்ற பிற இணைய தளங்களை, காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை, டிவைஸ் ஒன்றின் மூலம், நாள் ஒன்றுக்கு 1 மணி நேரம் மட்டுமே பயன்படுத்த முடியும்.
தொடர்ந்து ஒரு மணிநேரமோ அல்லது விட்டுவிட்டோ பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வசதிகள், சேலம் அம்மாபேட்டை அய்யாசாமி பூங்கா, பழையப் பேருந்துநிலையம், புதியப் பேருந்து நிலையம், சூரமங்கலம் உழவர் சந்தை, மாநகராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை அருகில் உள்ள ஸ்மார்ட் ட்ரீ வளாகம் ஆகிய 6 இடங்களில் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளவுட் தொழில்நுட்பத்தில் 100 எம்.பி. வேகத்தில் செயல்பட உள்ளதால், ஒரே நேரத்தில் 200 நபர்கள் வரை, இந்த வசதியினை பயன்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
மாநகராட்சி ஆப்பில், தங்களது கைப்பேசி எண்ணை பதிவு செய்ததும் ஓடிபி எண் வரும். அதைத் திரும்ப அனுப்பி இலவச வைஃபை சேவையை பயனாளிகள் பெற்றுக்கொள்ளலாம். அரசால் தடைசெய்யப்பட்ட இணையதளங்களை இதில் பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க மாநகராட்சி அலுவலகத்தில் தனிக்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சட்டென வளைவில்'... 'வேகமாக திரும்பிய பேருந்து'... 'நொடியில்’... ‘பெண்ணுக்கு நேர்ந்த சோகம்'!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- 'புதிதாக 3 ரயில் சேவைகள்'... ‘தமிழகத்தில் இன்று முதல் துவக்கம்’... விவரம் உள்ளே!
- ‘அதிவேகத்தில், பேருந்தை முந்தமுயன்று’... ‘தாறுமாறாக ஓடிய சொகுசுப் பேருந்து’... ‘அலறித்துடித்த பயணிகள்’... ‘தலைக்கீழாக கவிழ்ந்து நடந்த விபத்து’!
- 'அரசு, தனியார் கல்லூரிப் பேருந்துகள்’... ‘அதிவேகத்தில் மோதிக்கொண்ட’... 'பதறவைக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள்'!
- ஜியோவுக்கு போட்டியாக களமிறங்கிய ஏர்டெல், வோடஃபோன்..! வெளியான அதிரடி அறிவிப்பு..!
- 'அசுர வேகத்தில் மோதிக்கொண்ட அரசு மற்றும் தனியார் கல்லூரி பேருந்துகள்'.. 'அலறித் துடித்த மாணவிகள்'.. 30க்கும் மேற்பட்டோரின் பரிதாப நிலை!
- ‘பிரித்துவிடுவார்கள் என்ற பயத்தில்’... ‘காருக்குள்ளேயே’... ‘இளம் காதலர்களின் கோர முடிவால்’... ‘கதிகலங்கி நிற்கும் பெற்றோர்'!
- ‘காரில் இருந்து’.. ‘நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்ட’.. ‘காதலர்களின் சடலம்’..
- 'பொண்டாட்டிய அனுப்பி வைங்க'..மாமியார் கழுத்தை நெரித்துக்கொன்ற மருமகன்!