கைகொடுக்கும் 'பாரம்பரிய' மருத்துவம்... 'கொரோனாவைத்' தடுக்க 'கபசுர' குடிநீர்... 'சித்த' மருத்துவமனைகளில் 'இலவசம்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் வகையில் அரசு சித்த மருத்துவமனைகளில், பொதுமக்களுக்கு இலவசமாக கபசுர குடிநீர் வழங்குவது துவங்கி உள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதனைத் தடுக்க 'மக்கள் ஊரடங்கு' உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. 'சளி, காய்ச்சல், இருமல் வராமல் தடுத்தால், கொரோனா பாதிப்பில் இருந்து தப்பலாம் என்ற கருத்து நிலவுவதால், அதற்காக 15 மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும், கபசுர குடிநீர் கை கொடுக்கும் என சித்த மருத்தவர்கள் கருதுகின்றனர்.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளில் உள்ள, சித்த மருத்துவ அலுவலர்கள் வாயிலாக, பொதுமக்களுக்கு இலவசமாக, கபசுர குடிநீர் வழங்கும் பணி தொடங்கியுள்ளது.

சளி, காய்ச்சல், இருமல் பாதிப்பு உள்ளவர்கள், கபசுர குடிநீரை, இலவசமாக பெற்றுக் கொள்ளும்படி, அரசு சித்த மருத்துவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இது தொடர்பான, துண்டு பிரசுரங்களும், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

CORONA, SIDDA, MEDICINE, FREE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்