“இனி ரேஷன் கடைகளில் இதுவும் கிடைக்கும்!”.. ‘கொரோனாவுக்கு எதிராக’ தமிழக முதல்வரின் ‘புதிய’ திட்டம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் நியாய விலைக்கடைகளில் இலவசமாக முகக் கவசங்களை வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 பெயர்கள் உள்ள குடும்ப அட்டைதார உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் 2 முகக் கவசம் என்கிற அளவில், மொத்தம் 13 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798 பேருக்கு மறு பயன்பாட்டு வசதியுடன் கூடிய துணியாலான, முகக்கவசங்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் இந்த முகக்கவசங்களை நியாய விலைக்கடைகளில் பெற்றுக்கொள்ள ஏதுவாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். சென்னை மாநகராட்சி தவிர மற்ற பகுதிகளில் முதல் கட்டமாக 4 கோடி முகக்கவசங்கள் வழங்கப்படுவதுடன், மீதி 7 கோடி முகக் கவசங்களை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.

தலையின் பின்புறம் கட்டிக்கொள்வது போல், தயாரிக்கப்பட்டுள்ள இந்த முகக் கவசங்கள், தரமான பருத்தித் துணியால் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்