‘செல்ஃபி மோகத்தால்’.. ‘புதுமணப்பெண் உட்பட 4 பேருக்கு நடந்த பரிதாபம்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்கிருஷ்ணகிரி மாவட்டம் பாம்பாறு அணையில் செல்ஃபி எடுக்க முயன்ற 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த புதுமணத் தம்பதியான பிரபு மற்றும் நிவேதா, உறவுக்காரர்களான கனிதா, சினேகா, யுவராணி மற்றும் சந்தோஷ் ஆகியோருடன் நேற்று ஊத்தங்கரையில் சினிமா பார்த்துவிட்டு பாம்பாறு அணையைச் சுற்றிப் பார்க்கச் சென்றுள்ளனர். அணையில் அதிகளவு தண்ணீர் இருப்பதைப் பார்த்த அவர்கள் அணையின் ஓரத்தில் நின்று செல்ஃபி எடுத்துள்ளனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக கனிதா, சினேகா, யுவராணி, நிவேதா மற்றும் சந்தோஷ் ஆகிய 5 பேரும் அணைக்குள் தவறி விழுந்துள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பிரபு யுவராணியை மீட்டு கரை சேர்த்துள்ளார். அதற்குள் மற்ற 4 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் கனிதா, சினேகா, சந்தோஷ், நிவேதா ஆகிய 4 பேரின் உடல்களையும் மீட்டுள்ளனர். செல்ஃபி எடுக்கும்போது தவறி விழுந்து புதுமணப்பெண் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘2 குழந்தைகளுடன் கணவர் அனுப்பிய புகைப்படம்’.. ‘பதறியடித்து ஓடிவந்த மனைவி’.. ‘அதற்குள் நடந்துமுடிந்த விபரீதம்’..
- ‘மனைவியின் காதலன் மீது’.. ‘வழக்குத் தொடர்ந்த கணவருக்கு’.. ‘ரூ.5 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு’..
- ‘சாலையோரத்தில்’... ‘உணவு விற்கும் எம்பிஏ இளம் தம்பதி'... 'மனதை உருக வைக்கும் காரணம்’... வைரலான பதிவு!
- 'ஹலோ.. யாருகிட்ட?'.. 'தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்கங்க'.. தூள் தூளாய் பறந்த அதிகாரிகளின் கேமரா!
- 'எல்லாம் ஓகேதான்.. அதுக்காக.. WEDDING DRESS-அ இங்கெல்லாமா போட்டுக்கிட்டு போவாங்க?'.. வைரலாகும் ஃபோட்டோ!
- ‘பல வருஷமா ஹாஸ்பிட்டல் வாசலில் பிச்சை’.. திடீர் ‘கோடீஸ்வரி’ ஆன பாட்டிம்மா..!
- ‘தனியார் பேருந்து மீது’.. ‘108 ஆம்புலன்ஸ் மோதிய பயங்கர விபத்தில்’.. ‘நோயாளி, ஓட்டுநருக்கு நடந்த பரிதாபம்’..
- ‘நான் சொல்லிதான் அவரு செஞ்சாரு’.. ‘கணவர் கொலை வழக்கில்’.. ‘சரணடைந்துள்ள மனைவி வாக்குமூலம்’..
- ‘இந்தாங்க வீட்டுச் சாவி’... ‘கணவரின் காரணத்தைக் கேட்டு’... ‘அதிர்ந்துபோய் நின்ற போலீசார்’!
- ‘குழந்தையின் முகத்தில்’.. ‘சிகரெட் புகையை ஊதியபடி ஃபேஸ்புக் லைவ்’.. ‘தாயின் செயலுக்கு வலுக்கும் கண்டனம்’..