ஐபோன் மோகம்.. தப்பான ரூட்டில் போன முன்னாள் மிஸ்டர் இந்தியா.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முன்னாள் மிஸ்டர் இந்தியா பட்டம் பெற்ற வாலிபர் ஒருவர் செயின் பறிப்பு வழக்கில் கைதாகி இருப்பது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertising
>
Advertising

மனைவி மட்டன் சமைக்காததால் கோபம்.. போலீஸ்ல புகார் கொடுத்த கணவர்.. அடுத்து நடந்த வேடிக்கை சம்பவம்..!

சென்னையில் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் இரு வேறு பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறை கைது செய்துள்ளது. இதனையடுத்து அவரிடம் காவல்துறை நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

செயின் பறிப்பு

சென்னையில் உள்ள கொட்டித்தோப்பு பகுதியைச் சேர்ந்த பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் ஒரு பெண்மணியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் செயின் பறிப்பில் ஈடுபட்டு உள்ளார். அதன்பிறகு கொரட்டூர் பகுதியிலும் ஒரு பெண்ணுடைய செயினை பறித்துக் கொண்டு சென்றிருக்கிறார் இந்த ஹெல்மெட் ஆசாமி. இதனை அடுத்து ஏழுகிணறு பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அதே பகுதியில் இயங்கிவரும் ஒரு தங்க பட்டறையை சேர்ந்த நபர் 'சந்தேகத்திற்கிடமாக ஒரு வாலிபர் தங்கத்தினை உருக்க வந்ததாக' காவல்துறையிடம் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை காவல்துறை ஆய்வு செய்தது. அதில் நம்பர் பிளேட் இல்லாத ஒரு வாகனத்தில் கருப்பு நிற   டீ-ஷர்ட் அணிந்த நபர் ஒருவர் ஹெல்மெட் அணிந்தபடி சந்தேகத்திற்கிடமாக அங்குமிங்கும் இருசக்கர வாகனத்தில் அலைவதை காவல்துறையினர் பார்த்திருக்கின்றனர். இதன் அடிப்படையில் நடத்திய தேடுதல் வேட்டையில் இருவேறு பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக சென்னையைச் சேர்ந்த முகமது பாசில் என்பவரை காவல்துறை கைது செய்திருக்கிறது.

பட்டதாரி

செயின் பறிப்பு வழக்கில் கைதாகிய முஹம்மது பாசிலை காவல்துறையினர் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். இதில் பாசில் பிடெக் பட்டதாரி என்பதும் கல்லூரியில் படிக்கும்போதே அகில இந்திய அளவிலான இளையோருக்கான மிஸ்டர் இந்தியா போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பதும் தெரியவந்திருக்கிறது.

ஐபோன் மோகம்

வெளிநாட்டில் உள்ள தனது நண்பர் ஒருவரிடம் இருந்து ஐபோனை வாங்கி விற்பனை செய்து வந்திருக்கிறார் பாசில். இவரிடமிருந்து பல ஐபோன்களை வாங்கிய இவரது நண்பர் ஒருவர் பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக தெரிகிறது. இதனால் கடனாளி ஆன பாசில் கடனை அடைக்க வழிப்பறி திருட்டில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

முன்னாள் மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற வாலிபர் செயின் பறிப்பு வழக்கில் கைதாகி இருப்பது சென்னை பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நாட்டைவிட்டு தப்பிக்க முயன்ற உக்ரைன் முன்னாள் எம்பியின் மனைவி.. சூட்கேஸை திறந்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

CHENNAI, FORMER, MR INDIA CHAMPION, ARREST, CHAIN ROBBERY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்