சமையலறைக்குள் படமெடுத்து நின்ற ‘நல்லபாம்பு’.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை அருகே வீட்டின் சமையலறை பாத்திரங்களுக்கு இடையே நாகப்பாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே மாணிக்கா எஸ்டேட் பகுதியில் சிவா என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினர் சமைப்பதற்காக சமையல் அறைக்குள் சென்றுள்ளனர். அப்போது சமையல் பாத்திரத்துக்குள் பாம்பு ஒன்று புகுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் கருப்பசாமி, ஆனந்த் என்ற இரண்டு வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை செய்துள்ளனர்.
அப்போது சமையலறை பாத்திரங்களுக்கு இடையில் பாம்பு ஒன்று சுருண்டு இருந்தது தெரியவந்தது. நீண்ட போரட்டத்துக்கு பின் பாம்பை வனத்துறையினர் லாவகமாக பிடித்தனர். இது விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பு (நல்லபாம்பு) என வனத்துறையினர் தெரிவித்தனர். பின்னர் அப்பாம்பு வனப்பகுதிக்குள் விடப்பட்டது. இதேபோல் வால்பாறை தோட்டப்பகுதி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் நீண்ட நாள்களாக சுற்றி திரிந்த நாகப்பாம்பையும் வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பாத்ரூம் போன அப்பாவுக்கு என்ன ஆச்சு?’.. பார்க்க போன 2 மகன்களுக்கு அடுத்தடுத்து நடந்த பயங்கரம்.. கோவையை உலுக்கிய சம்பவம்..!
- ‘நான்காவது தூணை முடக்க வேண்டாம்’... ‘கோவை விவகாரத்தில்’... ‘கமல்ஹாசன் ட்விட்டரில் வலியுறுத்தல்’!
- 'அதிர்ஷ்டம் உங்கள தேடி வரும்...' 'டெலிவரி பாய் வேஷம் போட்டு இரு தலை பாம்பு விற்க வந்திருக்காங்க...' இந்த பாம்போட விலை என்ன தெரியுமா...? நூதன மோசடி சம்பவம்...!
- ‘பிரசவம்’ முடிந்து வீட்டுக்கு வந்த பெண்ணுக்கு ‘கொரோனா’.. ‘நள்ளிரவு’ மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அதிகாரிகள்..!
- ‘நான்கு நாட்களாக’... ‘இந்த 8 மாவட்டங்களில்’... ‘எந்த புதிய பாதிப்பும் இல்ல’... ‘கட்டுக்குள் வரும் கொரோனா’???
- 'கடிச்சே கொன்ருக்கு...' 'நள்ளிரவில் பாம்பிடம் விடாமல் போராடிய நாய்...' கோமா நிலையில் உயிருக்கு போராட்டம்...!
- ‘ஆம்புலன்ஸ்ல ஏத்தும்போதே உயிர் இல்ல’.. 6 வயசு சிறுவனுக்கு நடந்த கொடுமை.. கோவையை உலுக்கிய சம்பவம்..!
- 'ஆஹா... இந்தியா-லயும் ஆரம்பிச்சுட்டீங்களா பா!'... படையல் போடுவதற்கு முன்பு... ராஜநாகத்துடன் போஸ் கொடுத்த இளைஞர்கள்!
- 'எங்க ஊருக்கு வர யோசிப்பாங்க'...'ஆனா இந்த மவராசன் வந்தான்'...'இளம் மருத்துவருக்கு நேர்ந்த பரிதாபம்'...அதிர்ந்து நிற்கும் கோவை!
- சாப்பாடு கொடுத்த ‘சமூக ஆர்வலருக்கு’ கொரோனா தொற்று.. ‘கோவையில்’ 40 போலீசாருக்கு தீவிர பரிசோதனை..!