'இவங்களால மத்தவங்களுக்கும் பரவும்'... 'எல்லாமே விளையாட்டா போச்சா'... எச்சரித்த அமைச்சர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னரும் வீடுகளை விட்டு வெளியே வருவது, மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் முதல் உயிர் பலி நிகழ்ந்துள்ள நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''கொரோனா வைரஸ் தொடர்பாக தமிழகத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் உறுதியளித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 அம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்படும்.
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் தான் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. அதை அவர்கள் உணர்ந்தது போல தெரியவில்லை. இதுவரை வெளிநாட்டில் இருந்து வந்த 15000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கண்டிப்பாக சுய தனிமைப்படுத்தலை பின்பற்றி தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு விதித்த கட்டுப்பாடுகளை மீறி வெளியே வருவோரின் பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்படும். வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு இது வேண்டுகோள் அல்ல, கடுமையான எச்சரிக்கை. மேலும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தங்கள் வெளிநாட்டு பயணங்கள் பற்றிய தகவல்களை தெரிவிக்காவிடில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என அமைச்சர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
மற்ற செய்திகள்
‘தமிழகத்தில் முதல் பலி’.. ‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட மதுரை நபருக்கு’ சிகிச்சைப் பலனின்றி நடந்த சோகம்!
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழகத்தில்' மேலும் 3 பேருக்கு பாதிப்பு... 'கொரோனா' பாதித்தவர்களின் 'எண்ணிக்கை' 18 ஆக உயர்வு... அமைச்சர் அதிகாரப்பூர்வ தகவல்!
- உலகமே ‘லாக் டவுனில்’... ஆனால் ‘மார்ச் 25’ முதல்... ‘சீனா’ வெளியிட்டுள்ள ‘அதிரடி’ அறிவிப்பு...
- 'கொரோனா வைரஸ் வருது, கொஞ்சம் தள்ளி நில்லுப்பா...' 'வெங்காயம் நறுக்கிட்டு வைத்திருந்த கத்தியை எடுத்து...' கொரோனா வைரஸ் வைத்து கிண்டலாக பேசியதால் வெறிச்செயல்...!
- ‘மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா’... ‘தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது’... இவையெல்லாம் தடையில்லாமல் கிடைக்க ஏற்பாடு!
- 'கொரோனா இருக்கா...? இல்லையா...?' 'தெரிஞ்சுக்க கொஞ்சம் நேரம் போதும்...' 'ஒரு நாளைக்கு 15,000 சோதனை கருவிகளைத் தயாரிக்க முடியும்...' புதிய மருத்துவ கிட்டை உருவாக்கிய நிறுவனம்...!
- எனக்கு ‘கொரோனா’ இருக்கு... ‘அச்சத்தில்’ இளைஞர்கள் ‘அடுத்தடுத்து’ செய்த ‘காரியம்’... ‘அதிர்ச்சியை’ ஏற்படுத்திய சம்பவம்...
- '1500 மாஸ்க் செய்து அவரே எடுத்துட்டு வந்துருக்கார்...' 'கொரோனா பரவுவதை தடுப்பதற்காக...' மனிதம் காத்த தையல் கடைக்காரர்...!
- ‘கவனிப்பின்றி’ கைவிடப்பட்டு... ‘படுக்கையிலேயே’ நிகழும் மரணங்கள்... ‘மார்ச்சுவரி’ ஆக மாற்றப்பட்ட ‘ஷாப்பிங்’ சென்டர் ‘ஐஸ்’ ரிங்க்... ‘அதிரவைக்கும்’ நிலவரம்...
- ஊரடங்கு உத்தரவை அலட்சியப்படுத்திய... 900 பேர் மீது வழக்குப்பதிவு!... காவல்துறை அதிரடி!
- 'தமிழகத்தில்' கொரோனா வைரஸின் நிலை என்ன?... 'இன்றைய நிலவரம்’... ‘அமைச்சர் அதிகாரப்பூர்வ தகவல்’!