‘மொத்தமே 3 செகண்டுதான்’.. ‘கொரோனா பயத்துல அவசர அவசரமா..!’.. தஞ்சையை அதிரவைத்த வெளிநாட்டு தம்பதி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தஞ்சையில் ஆட்டோ ஸ்பேர்ஸ் கடைக்காரரிடம் வெளிநாட்டு சுற்றுலா தம்பதி நூதன முறையில் பணத்தை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் கொடிமரத்துமூலை பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர் அப்பகுதியில் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்கும் ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவருடைய கடைக்கு ஒரு வெளிநாட்டு தம்பதியினர் வந்துள்ளனர். அதில் அவர் கணவர் மட்டும் கடைக்கு செல்ல, மனைவி கடைக்கு எதிரே நின்றுகொண்டு இருந்துள்ளார்.

அப்போது கடையில் இருந்த பார்த்தசாரதியிடம், அந்த வெளிநாட்டு நபர் ‘நாங்கள் இந்தியாவுக்கு புதியவர்கள். இந்திய ரூபாய் நோட்டின் மதிப்பு குறித்து எங்களுக்கு தெரியாது. எந்த பணம் எவ்வளவு என்று விளக்கவேண்டும்’ என தன் கையில் இருந்த ரூபாய் நோட்டுகளை காட்டியுள்ளார். ஆனால் கொரோனா பயத்தால் பணத்தை கையில் வாங்காமலே பார்த்தசாரதி விளக்கியுள்ளார்.

இதனை அடுத்து நீங்கள் எந்த நாடு என கேட்டுள்ளார். ஆனால் அதுகுறித்து மழுப்பலாக பதிலளித்துவிட்டு 2000 ரூபாய் எப்படி இருக்கும் என கேட்டுள்ளார். உடனே தன்னிடம் வியாபாரத்துக்கு இருந்த 2000 ரூபாய் நோட்டுக்கட்டை எடுத்து காட்டியுள்ளார். அப்போது வெளியே நின்றுகொண்டிருந்த வெளிநாட்டு நபரின் மனைவி பார்த்தசாரதியின் கவனத்தை திசை திருப்பும் வகையில் செய்கை செய்ததாக கூறப்படுகிறது. அந்த சமயம் தன்னுடைய பர்ஸை ரூபாய் நோட்டுகளின் மேல் வைத்து நூதனமாக திருடி தன் பேண்ட் பாக்கெட்டில் வைத்து வெளிநாட்டு நபர் திருடியதாக தெரிகிறது.

இந்த நிலையில் கணக்கு முடிப்பதற்காக பணத்தை எண்ணும்போது 10,000 ரூபாய் குறைந்ததைக் கண்டு  பார்த்தசாரதி அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே கடையில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து பார்த்ததில் வெளிநாட்டு நபர் பணத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பணம் திருடுபோனது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்த பார்த்தசாரதி, ‘இந்திய பணத்தை காண்பித்து அதன் மதிப்பு கேட்டார். என்னடா கொரோனா நேரத்தில் இவர் கடையில் வந்து பேசிக்கொண்டு இருக்கிறாரே என்ற அச்சத்தால் அவசர அவசரமாக அவருக்கு பதில் சொல்லி அனுப்பினேன். மொத்தமே மூன்று செக்ண்டுதான் இருக்கும் அதற்குள் கவனத்தை திசை திருப்பி பணத்தை எடுத்துச் சென்றுவிட்டார்’ என தெரிவித்துள்ளார்.

News Credits: Vikatan

ROBBERY, MONEY, FOREIGNERS, TANJORE, SHOPKEEPER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்