ரேஷன் கடைகளில் 3,803 பணியிடங்கள்... யாருக்கெல்லாம் ஜாக்பாட்.. வரப்போகும் சூப்பர் அறிவிப்பு

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை: ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 3,803 பணியிடங்களை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு சங்க பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

ரேஷன் கடைகளில் உள்ள காலிபணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்பப்பட உள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்திருந்தார். இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எத்தனை காலி பணியிடங்கள்

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் 23,502 முழுநேர நியாயவிலை கடைகளும், 9639 பகுதிநேர நியாயவிலை கடைகள் என மொத்தம் 33,141 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நியாயவிலை கடைகளில் 31.12.2021 தேதியில் 3,176 விற்பனையாளர், 627 கட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன.  மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் பணியாளர்களை தேர்ந்தெடுத்து காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தனியே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பணியாளர்களின் பொறுப்பு

தற்போது 3,836 விற்பனையாளர்கள் தலா ஒரு நியாயவிலை கடையினை கூடுதலாக நிர்வகித்து வருகின்றனர். 1,128 விற்பனையாளர்கள் தலா 2 நியாயவிலை கடைகளையும், 222 விற்பனையாளர்கள் 3 கடைகளையும், 4 நியாயவிலை கடை, 15 விற்பனையாளர்கள் தலா 5 நியாயவிலை கடைகள் மற்றும் அதற்கு கூடுதலாக கடைகளை நிர்வகித்து வருகின்றனர். ஒரு தாய்க்கடையுடன் இணைக்கப்பட்டுள்ள பகுதிநேர கடைகளை கவனித்து கொள்வது கூடுதல் பொறுப்பின் கீழ் வராது.

அரசின் முக்கிய நடவடிகக்கை

ஆயினும், ஒரே பணியாளர் இரண்டுக்கு மேற்பட்ட முழுநேர நியாயவிலை கடைகளை பொறுப்பேற்று செயல்படுத்தி வருவது குடும்ப அட்டைதாரர்களுக்கு பொதுவிநியோக திட்ட பணிகளை திறமையாக செயல்படுத்துவதற்கு இடையூறாக அமையும். எனவே முழுநேர நியாய விலை கடையின் விற்பனையாளர் கூடுதலாக ஒரே ஒரு முழுநேர நியாயவிலை கடையின் பொறுப்பினை மட்டும் வகித்து வருவதை இணைபதிவாளர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக நியாயவிலை கடை பணியாளர்கள் கூறியதாவது, "தங்களது பணிச் சுமையை குறைக்க ஒரு நியாயவிலை கடைக்கு ஒருவிற்பனையாளர், ஒரு கட்டுநர் என்ற வகையில் ஆட்களை நியமித்தால் நல்லது" என்று கோரிக்கை வைத்துள்ளார்.

TAMILNADU RATION SHOP, JOB VACANCY, CO-OPERATIVE SOCIETIES, RATION SHOP WORKERS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்